மழையால் முடங்கிய விஜய் படக்குழு

மழையால் முடங்கிய விஜய் படக்குழு

1 mins read
7eedcdc0-8acc-4390-b701-8884ac4645d6
'தளபதி 65' படப்பிடிப்பின்போது விஜய், இயக்குநர் நெல்சன். -

ஜார்­ஜி­யா­வில் நடை­பெற்று வரும் 'தள­பதி 65' படத்­தின் படப்­பி­டிப்பு அங்கு பெய்­து­வரும் கன மழை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வாக்­குப்­ப­திவு முடிந்த கையோடு 'தள­பதி 65' படக்­கு­ழு­வி­னர் ஜார்­ஜியா புறப்­பட்­ட­னர். அங்கு முக்­கிய காட்­சி­க­ளைப் படம்­பி­டிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளார் இயக்­கு­நர் நெல்­சன்.

கொரோனா விவ­கா­ரத்­தால் எந்த நேரத்­தி­லும் பிரச்­சினை வர­லாம் என்­ப­தால்­தான் ஜார்­ஜி­யா­வில் முத­லில் படப்­பி­டிப்பு நடத்த முடிவு செய்­த­ன­ராம்.

ஆனால், அங்கு அண்­மைய சில தினங்களாக திடீர் மழை வெளுத்­துக் கட்­டு­கி­ற­தாம். அத­னால் கடந்த இரு தினங்­க­ளாக படக்­கு­ழு­வி­னர் தங்­கும் விடு­தி­க­ளி­லேயே முடங்­கி­யுள்­ள­னர்.

வேறு வழி­யின்றி திட்­ட­மிட்­ட­தை­விட மேலும் மூன்று தினங்­க­ளுக்குப் படப்­பி­டிப்பை நீட்­டிக்க வேண்­டும் என்று இயக்­கு­நர் நெல்­சன் கூற அதற்கு சம்­ம­தம் தெரி­வித்­துள்­ளார் விஜய்.

இத­னால் இயக்­கு­நர் தரப்பு நிம்­மதி அடைந்­துள்­ளது. கொட்டும் மழையில் ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.