திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
902067f2-a2a6-43a8-9344-9d58b50ee3df
-
multi-img1 of 2

தனுஷுடன் இணையும் கிருத்தி

தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தில் அவரது ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.

தெலுங்கில் வெளியான 'உப்பெணா' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளார் இந்த இளம் நாயகி. இதையடுத்து மூன்று தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

இந்நிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்துக்காக இவரை அணுகி உள்ளனர்.

தனுஷ் படம் என்பதால் உடனடியாக அதில் நடிக்க கிருத்தி ஒப்புக்கொண்டதாகத் தகவல்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி' படத்தில் நடித்துள்ளார் தனுஷ். அதன் அடுத்த பாகம் அல்லது புதுக்கதையைப் படமாக்க உள்ளார் பாலாஜி மோகன்.

திருமணம்: உறுதி செய்த விஷ்ணு

நடிகர் விஷ்ணு விஷால் தமது நீண்ட நாள் காதலியும் பேட்மிண்டன் வீராங்கனையுமான ஜுவாலா கட்டாவை எதிர்வரும் 22ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு தன் மனைவியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால். இதையடுத்து அவர் ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர். "நாங்கள் ஒன்றாகத் தொடங்கும் பயணத்துக்கு உங்கள் ஆசீர்வாதத்தை வேண்டுகிறோம்," என டுவிட்டரில் இருவரும் பதிவிட்டுள்ளனர்.