கிராமத்து 'செல்லப்பிள்ளை' கவுதம்

கிராமத்து 'செல்லப்பிள்ளை' கவுதம்

2 mins read
8cb41016-7a6b-40d6-8c99-f5b4481251c6
-

அண்­மைக்­கா­ல­மாக கவு­தம் கார்த்­திக் குறித்து புதுத் தக­வல்­கள் ஏதும் வெளி­யா­க­வில்லை.

பிற மொழிப் படங்­களில் கவ­னம் செலுத்து­வ­தாகக் கூறப்­படும் நிலை­யில், அவர் தமி­ழில் அடுத்­த­டுத்து நடிக்­கும் படங்­க­ளைப் பற்­றிய அறி­விப்­பு­கள் வெளி­யாகி உள்­ளன.

கிருஷ்­ணன் இயக்­கத்­தில் 'பத்து தல' படத்­தில் நடிக்­கி­றார் கவு­தம். முதல் முறை­யாக இதில் சிம்­பு­வு­டன் இணைந்­துள்­ளார்.

இதை­ய­டுத்து 'செல்­லப்­பிள்ளை' என்ற படத்­தி­லும் ஒப்­பந்­த­மாகி உள்­ளார். இரண்­டுமே முற்­றி­லும் மாறு­பட்ட கதைக்­க­ளங்­களாம்.

'ஹர ஹர மஹா தேவகி', 'இருட்­ட­றை­யில் முரட்டு குத்து' உள்­ளிட்ட படங்­களில் நடித்த வகை­யில் சில சர்ச்­சை­களில் சிக்­கி­னார் கவு­தம். சமூக வலைத்­த­ளங்­களில் பலத்த விமர்­சனங்­க­ளுக்­கும் ஆட்பட்­டார். இதை­ய­டுத்து கதை­க­ளைத் தேர்வு செய்­வ­தில் கவ­ன­மாக உள்­ளா­ராம்.

தற்­போது சிம்­பு­வு­டன் இணைந்து நடிக்­கும் 'பத்து தல' படம் வேக­மாக வளர்ந்து வரு­கிறது. அதே­போல் 'செல்­லப்­பிள்ளை' பட­மும் ரசி­கர்­க­ளைக் கவ­ரும் வகை­யில் உரு­வா­கி­ற­தாம்.

'செல்­லப்­பிள்ளை'யின் சுவ­ரொட்டி வெளி­யாகி உள்­ளது. இதை விஜய் சேது­பதி, சூரி, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவ­ரும் தங்­க­ளது சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்­துள்­ள­னர்.

"நம் தேசத்­தின் செல்­லப்­பிள்ளை நேதாஜி­யின் 125ஆம் ஆண்டு கொண்­டாட்­ட­மாக வெளி­வ­ரும் இந்த 'செல்­லப்­பிள்ளை'க்கு எனது நெஞ்­சார்ந்த நல்­வாழ்த்­து­கள்," என நடி­கர் சூரி குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­திய சுதந்­தி­ரத்­துக்­காக பாடு­பட்ட நேதாஜி சுபாஷ் சந்­திரபோசுக்கு புக­ழஞ்­சலி செலுத்­தும் வகை­யில் உரு­வா­கிறது 'செல்­லப்­பிள்ளை' திரைப்­ப­டம்.

இதில் கிரா­மப்­பு­றத்து இளை­யர் வேடத்­தில் நடிக்­கி­றார் கவு­தம். ஒட்­டு­மொத்த கிரா­ம­மும் அவரை செல்­லப்­பிள்­ளை­யாக கருதி கொண்­டா­டு­கிறது.

அந்த மக்­க­ளுக்குப் பிரச்­சினை ஏற்­ப­டும்­போது அவர் பொங்கி எழு­கி­றார். பின்­னர் அந்த மக்­க­ளுக்­காக அவர் என்ன செய்­தார் என்­ப­து­தான் கதை­யாம்.

ஃபிரோஸ் ஹுசைன் தயா­ரிக்­கும் இந்­தப் படத்­தின் மோஷன் சுவ­ரொட்­டி­யில் நேதாஜி குறித்த பல சுவா­ர­சி­ய­மான தக­வல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

"சில படங்­களில் நடிக்­கும்­போது நம்­மை­யும் அறி­யா­மல் சில விஷ­யங்­களை கற்­றுக் கொள்­வோம். அனு­ப­வம்­தான் ஒவ்­வொரு தனி மனி­த­னை­யும் பக்­கு­வப்­ப­டுத்­து­கிறது. அந்த வகை­யில் எனக்­குக் கிடைத்த அனு­ப­வங்­களை வைத்து நன்கு யோசித்து முடி­வு­களை எடுக்க கற்று வரு­கி­றேன்.

"நான் அடுத்து நடிக்­கும் படங்­கள் ரசி­கர்­க­ளைக் கவ­ரும் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் கவு­தம் கார்த்­திக்.

தற்­போது வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளங்­கள் அமை­வது தமக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தா­க­வும் அவர் அண்­மைய பேட்­டி­யில் கூறி­யுள்­ளார்.

கவுதம் கார்த்திக்