ஸ்ருதி ஹாசனின் 'வாட்ஸ்அப்' எண் கேட்ட ரசிகருக்கு அவர் கொடுத்த எண் இதுவே

ஸ்ருதி ஹாசனின் 'வாட்ஸ்அப்' எண் கேட்ட ரசிகருக்கு அவர் கொடுத்த எண் இதுவே

1 mins read
86e890ed-8a03-49f9-8ab1-4e14a688eead
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். படம்: தமிழக ஊடகம் -

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். வெறும் நடிப்பு என்றில்லாமல் இசை, மாடலிங், அரசியல் பணி என தற்போது சுழன்று வருகிறார். அண்மையில் தமது தந்தை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக கோயம்பத்தூரில் அரசியல் பணி செய்தார் ஸ்ருதி.

இப்படி பல்கலை வல்லவராக இருக்கும் ஸ்ருதி, சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டரில் தமது ரசிகர்களுடன் உரையாடலில் ஈடுபட்டார்.

அப்போது ரசிகர்களின் பல கேள்விகளுக்கு அசரவைக்கும் பதில் கூறி அவர்களை மகிழ்வித்தார் ஸ்ருதி. ஆனால், ரசிகர் ஒருவர் ஸ்ருதியின் 'வாட்ஸ்அப்' எண்ணைக் கேட்டார்.

அதற்கு ஸ்ருதி, '100' என போலிஸ் அவசர உதவி எண்ணைக் கொடுத்தார். அவரின் இந்தப் பதில் ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளது.

அதேபோல தமது கைபேசியில் யாரின் புகைப்படம் 'வால்பேப்பராக' இருக்கிறது என்று ஒரு ரசிகர் கேட்க, அதற்கு ஸ்ருதி, "கடவுள் முருகனின் படத்தை வைத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

கமல், என்னதான் தன்னை நாத்திகவாதி என்று சொல்லிக்கொண்டு கடவுள் மறுப்புப் பேசினாலும் ஸ்ருதி, தன்னை எப்போதும் ஆன்மிகவாதியாகத்தான் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.