சத்தமின்றி உதவும் சிவா

சத்தமின்றி உதவும் சிவா

2 mins read
6d4660be-3de5-477e-9fff-344fec09818c
சிவகார்த்தி கேயன் -

சத்­த­மில்­லா­மல் பல­ருக்கு தம்­மால் முடிந்த உத­வி­க­ளைச் செய்து வரு­கி­றார் நடி­கர் சிவ­கார்த்­தி­கே­யன்.

மேலும் திற­மை­சா­லி­க­ளைத் தேடிக் கண்­ட­றிந்து அவர்­களை ஊக்­கு­விக்­க­வும் அவர் தவ­று­வ­தில்லை.

அண்­மை­யில் சஹானா என்ற மாணவி மருத்­து­வப் படிப்­புக்­கான நுழை­வுத்­தேர்வை எழுத விரும்­பி­ய­போது, அதற்­கான பயிற்சி வகுப்­புக்­கு­ரிய கட்­ட­ணத்­தைச் செலுத்­தி­னார் சிவா.

இந்­நி­லை­யில் தேசிய அள­வி­லான தட­க­ளப் போட்­டி­யில் 100 மீட்­டர் தொலைவை 11.39 விநா­டி­களில் ஓடிக் கடந்த தன­லட்­சுமி என்ற இளம் வீராங்­க­னையை நேரில் அழைத்துப் பாராட்­டி உள்ளார்.

திருச்­சி­யைச் சேர்ந்த தன­லட்­சுமி தேசி­யப் போட்­டி­களில் தங்­கப்­ப­தக்­கம் வென்­றுள்­ளார். மேலும் பிர­பல தட­கள வீராங்­கனை ஹீமா­தா­ஸின் தேசிய சாத­னை­யை­யும் அவர் எட்­டி­யுள்­ளார்.

இதை அறிந்த சிவ­கார்த்­தி­கே­யன் தன­லட்­சு­மி­யைத் தமது அலு­வ­ல­கத்­திற்கு நேரில் வரு­மாறு அழைப்பு விடுத்து அந்த இளம் வீராங்­க­னை­யின் சாத­னை­யைப் பாராட்­டி­ய­து­டன் விலை உயர்ந்த 'ஸ்போர்ட்ஸ் ஷூ'வையும் பரி­ச­ளித்­துள்­ளார்.

மேலும் விளை­யாட்­டுத் துறை­யில் சாதிக்க எத்­த­கைய உதவி தேவைப்­பட்­டா­லும் தம்­மி­டம் கேட்­க­லாம் என்­றும் தம்­மால் முடிந்த உத­வி­க­ளைச் செய்யத் தயார் என்­றும் தன­லட்­சு­மி­யி­டம் உறுதி அளித்­துள்­ளார் சிவா.

அவ­ரது இந்­தச் செய­லுக்கு ரசி­கர்­கள் பல­ரும் பாராட்­டுத் தெரி­வித்­துள்­ள­னர். தமது நண்­பர்­கள் திரை­யு­ல­கில் சாதிக்­க­வும் உதவி செய்து வரு­கி­றார் சிவ­கார்த்­தி­கே­யன். அருண்­ராஜா காம­ராஜ், நடி­கர்கள் ரியோ, சதீஷ் ஆகி­யோர் இவ­ரால் பலன் பெற்­றுள்­ள­னர்.

சிவா நடிப்­பில் தற்­போது 'அய­லான்', 'டாக்­டர்' ஆகிய இரு படங்­கள் உரு­வாகி வரு­கின்­றன. இரண்­டுக்­கும் விநி­யோ­கிப்பாளர் கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு இருப்­ப­தா­கத் தக­வல். 'டாக்­டர்' படம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யாக இருப்­ப­தாக அண்­மை­யில் ஒரு தக­வல் வெளி­யா­னது.

ஆனால் படத்­த­யா­ரிப்­புத் தரப்பு இதை மறுத்துள்ளது. இந்­தப் படம் மே மாத மத்­தி­யில் திரை­ய­ரங்­கு­களில் மட்­டுமே வெளி­யா­கும் என்­றும் படக்­கு­ழு­வி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

மே 14ஆம் தேதி விஜய் ஆண்­டனி நடித்­துள்ள 'கோடி­யில் ஒரு­வன்' பட­மும் திரை­காண உள்­ளது. இரு படங்களுக்குமே போதுமான திரையரங்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வெளியீட்டுத் தேதியை தள்ளிப்போட வேண்டாம் என தயாரிப்புத் தரப்பிடம் சிவா கூறியுள்ளாராம்.