சசிகுமார் படத்தில் இரண்டு கதாநாயகிகள்

சசிகுமார் படத்தில் இரண்டு கதாநாயகிகள்

1 mins read
65f09142-3835-4be0-bdf0-201f38ddf608
-

அனிஸ் இயக்கத்தில் சசிகுமார், பிந்துமாதவி, வாணி போஜன் நடிப்பில் உருவாகும் படம் 'பகைவனுக்கு அருள்வாய்'. 'கூர்கா' படத்தை தயாரித்த '4 மங்கீஸ் ஸ்டுடியோ' இப்படத்தை தயாரிக்கிறது. இயக்குநர் அனிஸ் ஏற்கெனவே 'திருமணம் எனும் நிக்காஹ்' படத்தை இயக்கியவர். நாசர், சதீஷ், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். சசிகுமார் படங்களுக்கே உரிய குடும்ப உணர்வுகள், மண் வாசனையுடன் கூடிய காட்சிகள், சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளுடன் இப்படம் உருவாகி வருவதாகத் தகவல். தற்போது 'எம்ஜிஆர் மகன்' படத்தில் நடித்துள்ளார் சசிகுமார். இந்தாண்டு அவரது நடிப்பில் இரண்டு படங்களாவது வெளியீடு காணும் எனக் கூறப்படுகிறது.