தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணையத்தில் 'மதகஜராஜா'

1 mins read
131dfcf0-94c4-4ef3-b260-8286f3f9fc59
'மதகஜராஜா' படத்தில் இடம்பெறும் காட்சியில் விஷால், அஞ்சலி. -

ஒரு வழி­யாக பல ஆண்­டு­கள் கிடப்­பில் கிடந்த 'மத­க­ஜ­ராஜா' படம் வெளி­யீடு காண உள்­ளது. விஷால், வர­லட்­சுமி சரத்­கு­மார், அஞ்­சலி ஆகி­யோர் நடித்­துள்ள இப்­ப­டத்தை சுந்­தர்.சி இயக்கி உள்­ளார்.

இந்­நி­லை­யில் படத்தை தயா­ரித்த நிறு­வ­னத்­துக்கு பொரு­ளா­தா­ரப் பிரச்­சினை ஏற்­பட்­ட­தால் வெளி­யீடு முடங்­கி­ய­தாக தக­வல் வெளி­யா­னது. இத­னால் தாமே படத்தை வெளி­யி­டு­வது என்று முடிவு செய்­தார் விஷால்.

எனி­னும் ஒரு­சி­லர் பண விவ­கா­ரத்­தில் தலை­யிட வேண்­டாம் என்று அறி­வுரை கூறி­னார்­க­ளாம். குறிப்­பாக நடி­கர் விஜ­ய­காந்த் தனிப்­பட்ட வகை­யில் நேரில் அழைத்து அவ­ச­ரப்­பட வேண்­டாம் என்று அறி­வு­றுத்­தி­னா­ராம்.

இந்­நி­லை­யில் சுமார் ஆறு ஆண்­டு­கால இழு­ப­றிக்­குப் பிறகு நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யீடு காண்­கிறது 'மத­க­ஜ­ராஜா'.

தாம­த­மாக வெளி­யீடு கண்­டா­லும் அனைத்து தரப்பு ரசி­கர்­க­ளை­யும் கவ­ரும் வகை­யில் இந்­தப் படம் உரு­வாகி உள்­ளது என்­றும் குறிப்­பாக இளை­யர்­க­ளுக்கு இந்­தப் படம் பிடிக்­கும் என்­றும் படக்­கு­ழு­வி­னர் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர்.