கமலுக்கு வில்லனாகும் சேதுபதி

கமலுக்கு வில்லனாகும் சேதுபதி

2 mins read
7d8cb2e7-eba5-476c-8405-ea349ae718d3
விஜய் சேதுபதி -

கமல்­ஹா­சன் நடிக்­கும் அடுத்த படத்­தில் தம்மை வில்­ல­னாக நடிக்­கக் கேட்­டுள்­ள­தாக விஜய் சேது­பதி தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும் தனது கதா­பாத்­தி­ரத்­துக்கு உரிய முக்­கி­யத்­து­வம் இருந்­தால் மட்­டுமே அதில் நடிப்­பது என அவர் முடிவு செய்­துள்­ளா­ராம்.

'மாஸ்­டர்' படத்தை முடித்த பிறகு கமல் நடிக்­கும் 'விக்­ரம்' என்று தலைப்­பி­டப்­பட்­டுள்ள படத்தை இயக்­கு­கி­றார் லோகேஷ் கன­க­ராஜ். பட அறி­விப்பை வெளி­யிட்ட கையோடு முதற்­கட்­டப் பணி­க­ளைத் தொடங்­கி­விட்­ட­னர்.

தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் முடிந்­து­விட்­ட­தால் கம­லும் படப்­பி­டிப்­பில் பங்­கேற்கத் தயா­ரா­கி­விட்­டார். இந்­நி­லை­யில் கம­லு­டன் மோதும் வில்­ல­னாக மலை­யாள நடி­கர் பகத் ஃபாசில் நடிப்­ப­தாக தக­வல் வெளி­யா­னது.

'விக்­ரம்' படத்­தில் நடிப்­பதை பகத்­தும் ஒப்­புக்­கொண்­டார். இத­னால் அவர்­தான் வில்­லன் என்று கரு­தப்­பட்­டது. இந்­நி­லை­யில் படக்­கு­ழு­வி­னர் விஜய் சேது­ப­தியை அணு­கி­யி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

"கமல் சார் படத்­தில் நடிக்க இய­லுமா என்று கேட்டு என்னை அணு­கி­யி­ருப்­பது உண்­மை­தான். ரசி­கர்­கள் நினைப்­பது போல் வில்­லன் கதா­பாத்­தி­ரத்­துக்­கா­கத்­தான் என்னை அழைக்­கின்­ற­னர். ஆனால், நான் இன்­னும் கால்­ஷீட் ஒதுக்­க­வில்லை.

"இந்­தப் படத்­தில் நடிப்­பேனா என்­பதை இப்­போதே உறுதி செய்ய இய­லாது. இந்­தப் படத்­தில் கமல்­ஹா­சன், பகத் ஃபாசில் என்று இரண்டு சிறந்த கலை­ஞர்­கள் நடிக்­கின்­ற­னர். எனவே, நானும் அவர்­க­ளி­டம் இணை­ய­வேண்­டும் என்­றால் ஏதா­வது தனித்­தன்­மை­யு­டன் அந்­தக் கதா­பாத்­தி­ரத்தை மெரு­கேற்ற வேண்­டும். இல்­லை­யென்­றால் அந்­தப் படத்­தில் நடிப்­ப­தில் எந்­த­வித அர்த்­த­மும் இல்லை," என்­கி­றார் விஜய் சேது­பதி.

தாம் நடித்த தெலுங்­குப் படம் 'உப்­பெணா' வசூ­லில் சாதித்­தா­லும் மொழி தெரி­யா­த­தால் அப்­ப­டத்­துக்­கான வச­னங்­களை தாமே சொந்­தக் குர­லில் பேச முடி­யா­மல் போய்­விட்­டது என வருத்­தப்­ப­டு­கி­றார்.

"எனக்கு தெலுங்­கில் சரி­யா­கப் பேச வராது. அத­னால் 'உப்­பெணா'வில் வேறு ஒரு­வர் எனக்­கா­கப் பின்­னணி குரல் கொடுத்­தி­ருக்­கி­றார். நானே வச­னங்­க­ளைப் பேசி நடித்­தால்தான் எல்­லாம் இயல்­பாக இருக்­கும். நமது நடிப்­பும் எதிர்­பார்ப்­பதை விட சிறப்பாக இருக்­கும். அவ்­வாறு நடக்­க­வில்லை என்­ப­தில் வருத்தம் உள்­ளது," என்­கி­றார் விஜய் சேது­பதி.

இதற்­கி­டையே கமல்­ படத்­தில் சேது­பதி நடிக்­க­வில்லை என்­ப­தும்­கூட நல்ல தக­வல்­தான் என்று கமல் ரசி­கர்­கள் சிலர் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்டு வரு­கின்­ற­னர். கார­ணம், அண்­மை­யில் வெளி­யான 'மாஸ்­டர்' படத்­தில் வில்­ல­னாக நடித்­துள்ள சேது­பதி­யின் நடிப்பு விமர்­ச­கர்­கள், ரசி­கர்­க­ளால் வெகு­வா­கப் பாராட்­டப்­பட்­டது.

விஜய்யை விட சேது­ப­தி­யின் நடிப்பு மன­தைக் கவர்­வ­தாக கருத்­து­கள் வெளிப்­பட்­டன. 'விக்­ரம்' படத்­தி­லும் அது­போல் ஆகி­வி­டக்­கூ­டாது என்று கமல் ரசி­கர்­கள் கரு­து­வ­தாக சமூக வலைத்­த­ளங்­களில் சிலர் பதி­விட்­டுள்­ள­னர்.