நடிகை வேதனை: சிகிச்சையால் அழகுமுகம் அலங்கோலம்

நடிகை வேதனை: சிகிச்சையால் அழகுமுகம் அலங்கோலம்

1 mins read
3ac2a027-e293-436f-83c8-7a75cb4d6638
வீங்கிய முகத்துடன் தாம் காட்சியளிக்கும் அண்மைய புகைப்படம் ஒன்றையும் நடிகை ரைசா வில்சன் வெளியிட்டுள்ளார். படம்: இணையம் -

அழகு சிகிச்சையின் காரணமாக தமது முகம் வீங்கிப் போயுள்ளதாக நடிகை ரைசா வில்சன் கூறியுள்ளார்.

வீங்கிய முகத்துடன் தாம் காட்சியளிக்கும் அண்மைய புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதைக்கண்டு ரசிகர்கள் பதறிப் போயுள்ளனர்.

"அண்மையில் எளிமையான முறையில் என் முகத்தை பொலிவூட்டுவதற்காக அழகுக்கலை நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அதன் உரிமையாளரான ஒரு பெண்மணி நான் வேண்டாம் என்று சொன்னபோதும் கட்டாயப்படுத்தி என்னைச் சில அழகு செயல்முறைகளுக்கு உட்படுத்தினார்.

"அதன் விளைவாக என் முகம் வீங்கிப் போயிருக்கிறது. இதையடுத்து அவரைத் தொடர்புகொண்டபோது என்னிடம் பேச மறுத்துவிட்டார். அழகு நிலைய ஊழியர்களிடம் கேட்டபோது உரிமையாளர் வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர்," என்று இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ரைசா வில்சன்.

அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்