'தளபதி-65': சில தகவல்கள்

'தளபதி-65': சில தகவல்கள்

3 mins read
325a726e-d62a-428b-8833-1f916a980691
-

ஜார்­ஜி­யா­வில் முகா­மிட்­டி­ருக்­கிறது 'தள­பதி 65' படக்­குழு. நெல்­சன் தலை­மை­யில் படப்­பி­டிப்­புக்­கான அனைத்­து ஏற்­பா­டு­களும் கச்­சி­த­மாக இருப்­ப­தா­கப் பாராட்­டு­கி­றா­ராம் விஜய்.

மொத்­தம் 17 நாட்­கள் அங்கு படப்­பி­டிப்பு நடக்க இருக்­கிறது. கடும் மழை பெய்­வ­தால் மூன்று நாட்­கள் கூடு­த­லாக அங்கு தங்­கி­இருக்­க­வும் வாய்ப்­புண்­டாம்.

ஒரு பாடல், ஒரு சண்­டைக் காட்சி, விஜய், கதா­நா­யகி பூஜா ஹெக்டே சம்­பந்­தப்­பட்ட காட்சி­களை ஜார்­ஜி­யா­வில் பட­மாக்க உள்­ள­னர்.

சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­திவு முடிந்த கையோடு அன்­றி­ரவே ஜார்­ஜியா புறப்­பட்­டுச் சென்­றார் விஜய்.

அதே தினத்­தில்­தான் பூஜா­வும் அங்கு பறப்­ப­தாக இருந்­தா­ராம்.

ஆனால், தெலுங்­கில் சிரஞ்­சீ­வி­யு­டன் நடித்­து­வ­ரும் 'ஆச்­சார்யா' படப்­பி­டிப்­பின் முக்­கிய காட்­சி­களை அன்­றைய தினம் பட­மாக்­கு­வ­தாக தயா­ரிப்­புத் தரப்­பில் கூறப்­பட்­ட­தால் ஜார்­ஜியா பய­ணத்தை ஒரு­நாள் தள்ளி வைத்­துள்­ளார்.

எனி­னும் மறு­நாள் ஹைத­ரா­பாத்­தில் இருந்து மும்­பைக்­குச் சென்ற பிறகு அங்­கி­ருந்து ஜார்­ஜி­யா­வுக்­குப் பறந்­தி­ருக்­கி­றார்.

அதன்­பி­றகு ஒரு­சில மணி நேரம் மட்­டுமே ஓய்­வெ­டுத்­து­விட்டு படப்­பிடிப்­பில் பங்­கேற்ற பூஜாவை, விஜய் உள்­ளிட்ட அனை­வ­ரும் பாராட்டி உள்­ள­னர்.

ஜார்­ஜி­யா­வில் முத­லில் ஒரு பாடல் காட்­சி­யைத்­தான் பட­மாக்கி உள்­ள­னர். அந்­தப் பாடலை ஒரு­சில நாள்­க­ளுக்கு முன்பே தயார் செய்­து­விட்­டா­ராம் இசை­ய­மைப்­பா­ளர் அனி­ருத். தென்­னிந்­திய சினி­மா­வில் பிர­ப­ல­மாக உள்ள ஜானி மாஸ்­டர் இப்­பா­ட­லுக்கு நட­னம் அமைத்­துள்­ளார். அவர் முதன்­மு­றை­யாக விஜய்­யு­டன் இணை­யும் படம் இது.

அதி­ர­டி­யும் நகைச்­சு­வை­யும் கலந்­துள்ள கதை­யில் விஜய்­யின் நண்­ப­ராக நடிக்­கி­றார் யோகி­பாபு. இயக்­கு­நர் நெல்­ச­னின் குழு­வி­னர் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் மேலும் சிலர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

'டாக்­டர்' படத்­தில் நெல்­ச­னின் உதவி இயக்­கு­நரா­கப் பணி­பு­ரிந்த கவின் முக்­கி­ய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார்.

'கே.ஜி.எஃப்.' படத்­தின் இரு பாகங்­க­ளி­லும் பணி­யாற்­றிய சண்­டைப் பயிற்­சி­யா­ளர்­க­ளான இரட்­டை­யர்­கள் அன்­ப­றிவ் அமைத்­துள்ள சண்­டைக் காட்­சி­கள் ரசி­கர்­களை சிலிர்க்க வைக்­கும் என்­கி­றார்­கள் படக்­கு­ழு­வி­னர்.

இரண்­டா­வது நாய­கி­யாக நடிக்­கும் அபர்ணா தாஸ் மலை­யா­ளத்­தில் நன்கு பிர­ப­லம். பகத் ஃபாசிலு­டன் இவர் நடித்த இரண்டு படங்­களும் அங்கு வசூ­லில் வெற்றி கண்­டுள்­ளன.

"மொத்த கேர­ளா­வும் கொண்­டா­டும் விஜய் சார் படத்­தில் இவ்­வ­ளவு சீக்­கி­ர­மாக நானும் இடம்­பெறு­வேன் என்று எதிர்­பார்க்­கவே இல்லை. ஒரு பிரம்மாண்ட படைப்­பில் நானும் பங்­க­ளிக்க உள்­ளேன் என்­பதே என் வாழ்­வின் ஆகப்­பெ­ரிய மகிழ்ச்­சி­யாக உள்­ளது. நான் பெரி­தும் ஆசிர்­வ­திக்­கப்­பட்­ட­தாக உணர்­கி­றேன்," என்­கி­றார் அபர்ணா தாஸ்.

'தள­பதி 65' படத்­தில் சிவ­கார்த்­தி­கே­ய­னும் இணைந்­துள்­ளார் என்­ப­து­தான் கோடம்­பாக்­கத்­தின் தற்­போ­தைய ஆகப்­பெ­ரிய செய்தி.

சிலர் நினைப்­ப­து­போல் அவர் இந்­தப் படத்­தில் நடிக்­க­வில்லை. மாறாக, தனது எழுத்­தின் மூலம் பங்­க­ளிக்க உள்­ளார்.

விஷ­யம் இது­தான். இயக்­கு­நர் நெல்­ச­னும் சிவ­கார்த்­தி­கே­ய­னும் அண்­மைய நாட்­களில் மிக நெருங்­கிய நண்­பர்­க­ளாகி விட்­ட­னர். இதை­ய­டுத்து 'தள­பதி 65' படத்­துக்­காக ஒரு பாடல் எழு­தித் தரு­மாறு கேட்­டா­ராம் நெல்­சன்.

"விஜய் சார் படத்­தில் என் பாடலா? இவ்­வ­ளவு பெரிய வாய்ப்பை ஏற்று என்­னால் சரி­யாக இயங்க முடி­யுமா?" என்று சந்­தே­கத்­து­டன் கேட்­டி­ருக்­கி­றார் சிவா. எனி­னும் நெல்­சன் விடா­மல் ஊக்­கு­வித்­த­தால் ஒரு பாடலை எழு­திக் கொடுத்­துள்­ளார்.

இப்­ப­டத்­தின் வில்­லன் யாரென்­பது மட்­டும் இன்­னும் முடி­வா­க­வில்லை. 'பேட்ட' படத்­தில் ரஜி­னி­யுடன் மோதிய நவா­சு­தீன் சித்­திக், 'துப்­பாக்கி'யில் நடித்த வித்­யூத் ஜம்­வால் உள்­ளிட்ட சில­ரது பெயர்­கள் பரி­சீ­ல­னைப் பட்­டி­ய­லில் உள்­ளன.

ஜார்­ஜி­யா­வில் இருந்து திரும்­பு­வ­தற்­குள் யார் வில்­லன் என்­பதை விஜய்­யும் நெல்­ச­னும் தீர்­மா­னித்து விடு­வார்­கள் என்­பது உறுதி.

'டாக்­டர்' படத்­தின் பாதி படப்­பி­டிப்பு முடி­வடைந்த நிலை­யில்­தான் விஜய்யை சந்­தித்து கதை சொல்­லி­யி­ருக்­கி­றார் நெல்­சன். அவர் சில வரி­களில் சொன்ன கதை பிடித்­துப் போகவே 'டாக்­டரை' முடித்து­விட்டு வாருங்­கள் நானும் 'மாஸ்­டர்' படத்தை முடித்து விடு­வேன். உடனே வேலை­யைத் தொடங்கி விடு­வோம் என்று கூறி­யி­ருக்­கி­றார் விஜய்.

"இதன்­பி­றகு அனைத்து வேலை­களும் மட­ம­ட­வென நடந்து முடிந்து இப்­போது ஜார்­ஜி­யா­வில் படப்­பி­டிப்பு நடக்­கிறது என்­பதை என்­னால் கூட நம்ப முடி­ய­வில்லை. இந்­தப் பட­மும் விஜய் ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்­தும்," என்­கி­றார் நெல்­சன்.

, :   

விஜய்