சமந்தாவின் மனித நேயம்

தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யில் தாம் அளித்த வாக்குறுதி­யின்­படி பெண் ஆட்டோ ஓட்­டு­ந­ருக்குப் புதிய கார் வாங்­கிப் பரி­ச­ளித்­துள்­ளார் நடிகை சமந்தா.

சில மாதங்­க­ளுக்கு முன்பு தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்­றில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கப் பங்­கேற்ற சமந்­தா­வி­டம் அந்­தப் பெண் ஆட்டோ ஓட்­டு­நர் தமது சிரம நிலையை விவ­ரித்­தார்.

தமக்கு ஏழு சகோ­த­ரி­கள் இருப்­ப­தா­க­வும் பெற்­றோர் கால­மா­கி­விட்­ட­தால் அவர்­க­ளைக் கரைசேர்க்க ஆட்டோ ஓட்டி வரு­மா­னம் ஈட்­டு­வ­தா­க­வும் அந்­தப் பெண் ஓட்­டு­நர் கூறி­னார்.

எனி­னும் தமக்­குப் போது­மான வரு­மா­னம் கிடைக்­க­வில்லை என்று அந்­தப் பெண் கூறி­ய­தைக் கேட்டு நெகிழ்ந்­து­போ­னார் சமந்தா. தமது செல­வில் ஒரு கார் வாங்­கித் தரு­வ­தாக உறுதி அளித்­த­வர், அதை வைத்­துப் பயண நிறு­வ­னம் நடத்தி அதிக வரு­மா­னம் பெற­லாம் என்றும் ஆறு­தல் கூறி­னார்.

இந்­நி­லை­யில் தாம் கொடுத்த வாக்­கு­று­தி­யைக் காப்­பாற்­றும் வகை­யில் 12 லட்­சம் ரூபாய் மதிப்­புள்ள காரை அந்­தப் பெண் ஆட்டோ ஓட்டு­ந­ருக்கு வாங்­கிக் கொடுத்­துள்­ளார் சமந்தா. அவரது மனித நேயத்தை பலர் பாராட்டியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!