மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தும் கலைஞர்கள்

மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தும் கலைஞர்கள்

2 mins read
b768af39-d819-4f90-b75f-2e2caec90eb6
விவேக்குடன் மேலாளர் செல் முருகன் (இடது), தமது தந்தை, மகனுடன் அருண் விஜய். -
multi-img1 of 3

நடி­கர் விவேக் வழி­யைப் பின்­பற்றி தமி­ழ­கம் முழு­வ­தும் மரக்­கன்­று­களை நட­வேண்­டும் என பல்­வேறு தரப்­பி­ன­ரும் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

ஒரு­சி­லர் இப்­போதே அந்­தப் பணி­யைத் துவங்கிவிட்­ட­னர். அவர்­களில் இளம்­நா­யகி ஆத்­மி­கா­வும் ஒரு­வர். விவேக் நினை­வாக தமது வீட்­டில் மரக்­கன்­று­களை நட்­டுள்­ளார் இவர். இது­கு­றித்து தமது சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

"சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு, நீர் தேவை ஆகி­ய­வற்றை எல்­லாம் முன்­கூட்­டியே நன்கு உணர்ந்­துள்­ளார் விவேக் சார். மக்­க­ளுக்கு நன்மை செய்­யக்­கூ­டிய இந்த உன்­னதப் பணி­யைப் பல ஆண்­டு­க­ளுக்கு முன்பே அவர் துவங்கி உள்­ளார். "ஒரு கோடி மரங்­களை நட­வேண்­டும் என்ற அவரது மகத்­தான கனவை நாம் அனை­வ­ரும் சேர்ந்து நிறை­வேற்ற வேண்­டும்," என்று ஆத்­மிகா தெரி­வித்­துள்­ளார்.

நடி­கர் அருண் விஜய்­யும் தனது தந்­தை­யும் நடி­க­ரு­மான விஜ­ய­குமார், தனது மக­னு­டன் சேர்ந்து தம் வீட்டில் மரக்­கன்­று­கள் நட்டார்.

இந்­நி­லை­யில் விவேக்­கைத் தவிர தமக்கு யாரும் இல்லை என்று குறிப்­பிட்­டுள்­ளார் அவ­ரது மேலா­ள­ரும் நெருங்­கிய நண்­ப­ரு­மான செல்­மு­ரு­கன்.

கடந்த பல ஆண்­டு­க­ளாக விவேக்­கின் மேலா­ள­ராக இருந்து வந்த செல் முரு­கன், பல திரைப்­ப­டங்­களில் இடம்­பெற்ற நகைச்­சு­வைக் காட்­சி­களில் விவேக்­கு­டன் இணைந்து நடித்­துள்­ளார். அக்­காட்­சி­க­ளுக்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­தது.

திரைப்­ப­டங்­க­ளுக்­கான விவேக்­கின் நகைச்­சு­வைப் பகு­தியை உரு­வாக்­கு­வ­தில் செல் முரு­க­னும் முக்­கி­யப் பங்கு வகித்­தார்.

"எல்­லோ­ருமே முரு­கன்­தான் துணை என்­பார்­கள்; இனி முரு­க­னுக்கு யார் துணை? விடை இல்­லா­மல் விரக்­தி­யில் கேட்­கி­றேன். யார் துணை?" என்று செல் முரு­கன் தமது பதி­வில் குறிப்­பிட்­டி­ருப்­பது திரை­யு­ல­கத்­தி­னரை நெகிழ வைத்­துள்­ளது. அவ­ருக்கு ஏரா­ள­மா­னோர் ஆறு­தல் கூறியுள்ளனர்.