இதுவரை வெளியான தனுஷ் திரைப்படங்களில் அதிக வசூல் என்கிற சாதனையை 'கர்ணன்' திரைப்படம் நிகழ்த்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது இந்தப் படம்.
தமிழகத்தில் முதல் நாளே ரூ.10 கோடி வசூல் கண்ட இப்படம் தனுஷின் 'அசுரன்' படத்தின் வசூலையும் முந்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக திரையரங்கில் 50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப முடியும் என்றபோதும், 'கர்ணன்' வசூல் தொடர்ந்து நன்றாக உள்ளதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.