சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'அடங்காதே' படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இதையடுத்து அப்படம் விரைவில் திரை காண உள்ளது.
இதில் ஜி.வி. பிரகாஷ், சுரபி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்' படத்தின் வசனங்களையும் சண்முகம் முத்துசாமி எழுதியிருந்தார்.
காசியில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்தி நடிகை மந்த்ரா பேடியும் இணைந்துள்ளார்.
மேலும் சரத்குமார், தம்பி ராமையா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க எம்.எஸ்.சரவணன் தயாரித்துள்ளார்.
இப்படம் கடந்தாண்டு இறுதியிலேயே வெளியீடு காணத் தயாராகி விட்டதாம். தொழில்நுட்பப் பணிகளும் முடிவடைந்த நிலையில் பட வெளியீடு சில காரணங்களால் தாமதப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது அனைத்துப் பணிகளும் முடிந்து தணிக்கைச் சான்றிதழும் பெற்றுள்ளதால் படக்குழுவினர் அதன் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

