திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
07ae73e9-4327-4691-95f9-bc44ec3bcb86
-
multi-img1 of 2

கல்விச்சேவை: தாமுவுக்கு விருது

நகைச்சுவை நடிகர் தாமு தனது கல்விச்சேவைக்காக தேசிய கல்வியாளர் விருதைப் பெற்றுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார் தாமு. முனைவர் பட்டமும் பெற்றுள்ள இவர், இயக்குநர் பாலசந்தரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர்.

கடந்த பத்தாண்டுகளாக கல்வித்துறையில் சேவையாற்றி வந்தார் தாமு. மாணவர்கள் மத்தியில் கல்வியின் அவசியம் குறித்து இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வைப் பாராட்டி தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தேசிய கல்வியாளருக்கான 'ராஷ்டிரிய சிக்‌ஷா கவுரவ் புரஸ்கார் 2021' விருதை அளித்துள்ளது.

விஷ்ணு, ஜுவாலா திருமணம்

நடிகர் விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா திருமணம் சிறப்பாக நடைபெற்றது. ஜுவாலா கட்டா பேட்மின்டன் வீராங்கனை ஆவார். தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் ஜுவாலாவை நீண்ட நாள்களாக காதலித்து வந்தார் விஷ்ணு விஷால். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இவர்களின் திருமண நிகழ்வில் திரையுலகம், விளையாட்டுத் துறையைச் சார்ந்த நெருக்கமான நண்பர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது இரண்டு படங்களைச் சொந்தமாக தயாரித்து நாயகனாக நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.