ராஷ்மிகா: மனம் ஏங்குகிறது

ராஷ்மிகா: மனம் ஏங்குகிறது

3 mins read

, :   

ராஷ்மிகா மந்தனா

அமி­தாப்­பச்­சன் போன்ற பெரிய நடி­கர்­க­ளு­டன் இணைந்து நடிக்­கும் வாய்ப்­பு­கள் தொடர்ந்து அமை­ய­வேண்­டும் என தன் மனம் ஏங்­கு­வ­தாக சொல்­கி­றார் ராஷ்­மிகா மந்­தனா.

இந்­தி­யி­லும் தற்­போது அதிக வாய்ப்­பு­கள் தேடி­வ­ரு­வது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்­ப­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

அமி­தாப்­பச்­ச­னு­டன் 'குட்பை', 'மிஷன் மஞ்சு' உள்­ளிட்ட இந்­திப் படங்­களில் ராஷ்­மி­கா­வைப் பார்க்­க­மு­டி­யும். இப்­ப­டிப்­பட்ட வாய்ப்பு­க­ளுக்­காக தாம் ஏங்­கி­ய­துண்டு என்று கூறு­கி­றார்.

அமி­தாப்­பச்­ச­னு­டன் நடிக்­கும் வாய்ப்பு தம்­மைத் தேடி வந்­தி­ருப்­ப­தாக சொன்­ன­போது இவ­ரது பெற்­றோர் அறவே நம்­ப­வில்­லை­யாம். 'நீ சொல்­வது உண்­மையா? அல்­லது வேண்டு­மென்றே பொய் சொல்லி விளை­யா­டு­கி­றாயா?' என்று பல­வி­த­மாக கேள்வி கேட்டு துளைத்­தெ­டுத்­தார்­க­ளாம்.

அதன்­பி­றகு தன் தலை­யில் அடித்து சத்­தி­யம் செய்த பிறகே பெற்­றோர் அந்­தத் தக­வலை நம்­பி­ய­தா­கச் சொல்­கி­றார்.

"அடுத்த சில தினங்­களி­லேயே எனது நண்­பர்­கள் தமிழ், தெலுங்கு திரை­யு­ல­கைச் சேர்ந்­த­வர்­கள் என்று அனை­வ­ருக்­கும் இந்த விஷயம் தெரிந்­து­விட்­டது. இந்­தி­யில் அறி­மு­க­மா­வ­தும் அடுத்­த­டுத்து இரண்டு படங்­களில் நடிப்­ப­தும் தாம் எதிர்­பா­ராத ஒன்று," என்­கி­றார் ராஷ்­மிகா.

அமி­தாப்­பச்­சன் மீது இவ­ரது பெற்­றோ­ருக்கு மிகுந்த மரி­யாதை உள்­ள­தாம். இரு­வ­ருமே அவ­ரது ரசி­கர்­க­ளாம்.

"அமி­தாப்­பச்­ச­னு­டன் நடிக்­கப் போகி­றாய். எனவே, ஆசி­ரி­யர் முன்பு நிற்­கும் ஒரு மாணவி போன்று மரி­யா­தை­யு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும் என்று எனக்கு அறி­வுரை கூறி­னர். படப்­பி­டிப்­பில் நடந்­த­வற்றை எல்­லாம் அவர்­க­ளுக்கு அவ்­வப்­போது தெரி­விப்­பேன்.

"படப்­பி­டிப்­பின்­போது அமி­தாப்­பச்­சன் சாரைக் கண்­ட­தும் கொஞ்­சம் பதற்­ற­மாக இருந்­தது. அவர் நம்­மை­யெல்­லாம் கண்­டு­கொள்­வாரா என்­று­கூட யோசித்­தேன். ஆனால் அவர் பெரிய நடி­கர் என்­றெல்­லாம் பார்க்­கா­மல் மிக இயல்­பாக என்­னு­டன் பேசி­னார்.

"நான் சொல்­வ­தை­யும் பொறு­மை­யாக காது கொடுத்­துக் கேட்­டார். அவ­ரு­டன் பேசிய அந்த நொடி­யி­லேயே பதற்­றம் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்­டேன்," என்­கி­றார் ராஷ்­மிகா.

அமி­தாப்­பச்­சன் மட்­டு­மல்­லா­மல், மற்ற திரை உலகு­க­ளைச் சேர்ந்த சிரஞ்­சீவி, மோகன்­லால், கமல்­ஹா­சன், ரஜினி உள்ளிட்ட அனை­வ­ரு­ட­னும் இணைந்து நடிக்க விரும்­பு­வ­தா­கச் சொல்­கி­றார் ராஷ்­மிகா.

இவ­ரைப் போலவே விஜய் பட நாயகி பூஜா ஹெக்­டே­வுக்­கும் ஒரு ஏக்­கம் இருக்­கிறது. ஆனால் அது சினிமா துறை சம்­பந்­தப்­பட்­ட­தல்ல.

வேறொன்­று­மில்லை... முகக்­க­வ­சம் அணி­யா­மல் பழை­ய­படி இயல்­பான வாழ்க்­கையை வாழ­வேண்­டும் என்­ப­தே பூஜா­வின் ஏக்­க­மாம். முன்பு சுதந்­தி­ர­மா­க­வும் உற்­சா­க­மா­க­வும் சுற்­றித் திரிந்­தது போல் இப்­போது செய்யமுடி­யாது என்­பது வருத்­த­ம­ளிப்­ப­தாக அண்­மைய பேட்­டி­யில் அவர் தெரி­வித்­துள்­ளார்.

"கொரோ­னா­வுக்கு முந்­தைய, பிந்­தைய வாழ்க்கை என்று நிலைமை மாறி­விட்­டது. அந்­தக் கிருமி எல்­லோ­ரது வாழ்க்­கை­யி­லும் பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. ஏழை, பணக்­கா­ரன் என்ற வித்­தி­யா­சம் பாரா­மல் அனை­வ­ரை­யும் தாக்­கும் அந்­தக் கிரு­மி­யி­ட­மி­ருந்து தப்­பிக்க வேண்­டும் என்­றால் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம் என்ற சூழ்நிலை வேதனை அளிக்­கிறது," என்­கி­றார் பூஜா.

இப்­படி எங்­குமே சுதந்­தி­ர­மாக இருக்க முடி­ய­வில்லை என்­பது சில சம­யங்­களில் எரிச்­ச­லூட்டுவதா­கக் குறிப்­பி­டு­ப­வர், முகக்­க­வ­ச­மற்ற மனித வாழ்க்கை என்­பது இனி சாத்­தி­யப்­ப­டுமா என்­பதே தெரி­ய­வில்லை என்­கி­றார்.

"உண்­மை­யைச் சொல்­ல­வேண்­டு­மென்­றால் முகக்­க­வ­சம் அணி­யா­மல் வாழும் வாழ்க்கை எப்­போது வருமோ எனும் ஏக்­கம் மன­துக்­குள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது. அப்­படி ஒரு நாள் விரை­வில் வந்­தால் அதுவே வாழ்க்­கை­யின் மிக மகிழ்ச்­சி­யான தரு­ண­மாக எனக்கு அமை­யக்­கூடும்," என்­கி­றார் பூஜா ஹெக்டே.