திரைத் துளி-கள்

திரைத் துளி-கள்

2 mins read
2d499895-8a97-47ef-8208-c887ff82cda0
-
multi-img1 of 2

போலிக்கணக்கு: எச்சரிக்கும் நாயகி

தமது பெயரில் சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக நடிகை அதுல்யா ரவி தெரிவித்துள்ளார்.

எனவே அவற்றின் மூலம் பெறக்கூடிய தகவல்களை நம்ப வேண்டாம் என ரசிகர்களை அவர் எச்சரித்துள்ளார்.

தற்போது சாந்தனுவுடன் 'முருங்கைக்காய் சிப்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அதுல்யா ரவிக்கு அண்மையில்தான் தமது பெயரில் போலி சமூக வலைத்தளப் பக்கங்கள் இயங்கி வருவது தெரிய வந்துள்ளது.

இதனால் தாம் கடும் அதிர்ச்சி அடைந்ததாகவும் யார் இவ்வாறு அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டனர் என்பது தமக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

"ஃபேஸ்புக்கில் எனது புகைப்படங்களை வெளியிட்டு திரையுலகிலும் பொதுவெளியிலும் எனக்கு நன்கு அறிமுகமானவர்களுக்கு நான் அனுப்புவது போன்று சில தகவல்களை அனுப்பி உள்ளனர்.

"நான் இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. எனவே காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். என் நலன்விரும்பிகள் ஏமாந்துவிட வேண்டாம்," என்று அதுல்யா ரவி தெரிவித்துள்ளார்.

பேய் வேடத்தில் நடிக்கும் காஜல்

'கோஸ்டி' என்ற தலைப்பில் உருவாகும் புதுப்படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இதில் பேய் வேடத்தில் தோன்றுகிறார்.

இந்த கதாபாத்திரத்துக்கான ஒப்பனைக்கு மட்டும் தினமும் நான்கு மணி நேரம் ஆகிறதாம்.

மேலும் வீட்டிலேயே பல காட்சிகளில் நடிப்பதற்கான ஒத்திகையிலும் ஈடுபட்டதாகச் சொல்கிறார்.

கதாபாத்திரத்துக்காக அவர் தன்னை தயார்படுத்திக் கொண்ட விதம், படக் குழுவினரை ஆச்சரியப் படுத்தியதாகச் சொல்கிறார் படத்தின் இயக்குநர் எஸ்.கல்யாண். இவர் இதற்கு முன்பு பிரபுதேவா நடித்த 'குலேபகாவலி' படத்தை இயக்கியவர்.

"இந்தப் படம் மற்ற பேய் படங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். ஒட்டுமொத்த படக்குழுவினரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதைப் பாராட்ட வேண்டும். என் திரை வாழ்வில் இந்தப் படத்துக்கும் முக்கிய இடம் உண்டு," என்கிறார் காஜல்.