விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வருகிறது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார்.
இது தேசங்களைத் தாண்டிய அகதியின் கதை என்றும் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிப்பதாகவும் சொல்கிறார் இயக்குநர்.
"எட்டு வயதில் வீட்டிலிருந்து தொடங்கும் ஒரு சிறுவனின் பயணம் ஓர் இசைக்கலைஞராகவும் அகதியாகவும் அவனை நடமாட வைத்து, பிறகு எந்த இடத்தில் அவனைக் கொண்டு சேர்க்கிறது என்பதுதான் கதை.
"நம்மில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் அனைத்து முக்கிய நிகழ்வுகளுமே முப்பது வயதுக்குள் நடந்து முடிந்துவிடும். வாழ்க்கையைப் புரட்டிப்போடும் இந்த விஷயங்கள் சொல்லி வைத்தாற்போல் அடுத்தடுத்து நிகழும். நம் மனதில் ஏதோ ஓர் ஆசை இருக்கும். ஏதோ ஒரு தவற்றைச் செய்யத் தூண்டும். வாழ்க்கையில் விதவிதமான மனிதர்கள் குறுக்கிடுவார்கள். வினோதமான நிகழ்வுகள் நடக்கும். பெண்கள், வாழ்க்கை, பணம் என்று நிறைய மாற்றங்கள் நடக்கும் காலகட்டம் அது.
"இப்படிப்பட்ட அனுபவங்களை எதிர்கொள்ளும் ஒருவனை வாழ்க்கை எங்கே கொண்டுபோய் நிறுத்துகிறது என்பதை எடுத்துச்சொல்லும் படம் இது," என்கிறார் இயக்குநர் வெங்கட கிருஷ்ணன் ரோகாந்த்.
விஜய் சேதுபதி ஒரு கதாபாத்திரத்தில் அமரும்போது அவருக்கென உள்ள தனி பாணி வெளிப்படும் என்று குறிப்பிடுபவர், சேதுபதியைத் தாம் திறமையின் வடிவமாகப் பார்ப்பதாகச் சொல்கிறார்.
"அவரது நடிப்பைப் பார்த்து பல இடங்களில் வியந்து போயிருக்கிறேன். தாம் எங்கேயோ எப்போதோ கேட்ட, பார்த்த அனுபவங்களை எடுத்துக் கொள்கிறார். நான் எதிர்பார்ப்பதற்கும் அதிகமான நடிப்பைத் தருகிறார்.
"நாம் மனதில் ஒன்று நினைத்திருப்போம். பல அம்சங்களைச் சுருக்கித் தேர்ந்தெடுத்து நான்கு வரியில் வசனம் கொடுத்திருப்போம். ஆனால் அவரோ அனைத்தையும் அனாயாசமாகக் கடந்துவிடுவார். சுண்டக் காய்ச்சிய அந்த வசனங்களைக் கடந்து அவரது முகபாவங்களும் உடல் மொழியும்தான் முந்தி நிற்கும். வசனங்களே தேவையில்லை எனும் நிலையை ஏற்படுத்திவிடுவார்," என்று பாராட்டித் தள்ளுகிறார் இயக்குநர்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் இயக்குநர் மகிழ்திருமேனிதான் வில்லன். கனிகா முக்கியப் பாத்திரத்தில் தோன்றுகிறார்.
கதாநாயகி மேகா ஆகாஷ் குறித்து?
"எது வேண்டுமோ அதை அவரிடம் தெளிவாகச் சொல்லிவிட்டால் போதும். கச்சிதமாக நடித்து விடுவார். அவர் இன்னும் பல உயரங்களை எட்டிப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. இயக்குநர் மகிழ்திருமேனி குறித்து தனியே சொல்ல வேண்டியதில்லை. தன் குரலுக்காகவும் அறியப்பட்டவர். இப்போது முதல் தரமான வில்லனாக மாறியுள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் பல இயக்குநர்களால் தேடப்படும் ஆளாக மாறுவார்," என்று சொல்லும் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த், இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க கரு. பழனியப்பனைத்தான் அணுகினாராம்.
ஆனால், அவரோ விஜய் சேதுபதிதான் பொருத்தமாக இருப்பார் என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
சேதுபதியை இசைக் கலைஞராக்கி விட்டீர்களே?
"அது மட்டும் அல்ல, அகதிகளின் பிரதிநிதியாகவும் அவர் பார்க்கப்படு வார். சாதாரண மனிதன் படும் பாடு, அவனது இன்ப துன்பம் என எல்லாம் இருக்கும்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வார்த்தைகள் எத்தனை ஆண்டுகள், யுகங்களைக் கடந்து நிற்கிறது என்பது தெரியும்.
"அந்த வார்த்தை களுக்கு அர்த்தம் கொடுப்ப தாக இப் படம் அமை யும்," என்கி றார் வெங்கட்.
விரைவில் திரை காண்கி றது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படம்.
விஜய் சேதுபதி
, :

