தமக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக் கோரி அழகுக்கலை நிபுணருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகை ரைசா வில்சன்.
அண்மையில் முக அழகை மேம்படுத்தும் சிகிச்சையின்போது தனது முகம் வீங்கி அலங்கோலமாகிவிட்டதாக ரைசா புகார் எழுப்பியிருந்தார். இந்நிலையில் தமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். எனினும் ரைசாவின் இந்தக் குற்றச்சாட்டை அந்த அழகுக்கலை நிபுணர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என அவர் கூறியுள்ளார்.

