சிம்புவின் திறனை வியந்து பாராட்டிய கல்யாணி

1 mins read
679defce-0ea6-465b-9e64-c71d07b892f3
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன். , :    -

படத்­தின் ஆறு நிமி­டம் ஓடக்­கூ­டிய காட்­சியை ஒரே 'டேக்'கில் எந்த ஒரு பிசி­ற­லும் இன்றி நடித்­துக் காட்­டி­னார் நடி­கர் சிம்பு.

இதைக்­கண்டு ஆச்­ச­ரி­யம் அடைந்த நடிகை கல்­யாணி பிரிய தர்­ஷன், "இது­போல் வேறு யாரா­லும் முடி­யாது, உங்கள் திறமை அபூர்வமானது," என்று மனம்­திறந்து பாராட்­டி உள்ளார்.

சுரேஷ் காமாட்­சி­யின் தயா­ரிப்­பில், வெங்­கட்­பி­ரபு இயக்­கத்­தில் உருவாகி வரு­கிறது 'மாநாடு' திரைப்படம். சிலம்­ப­ர­ச­னும் கல்­யாணி பிரி­ய­தர்­ஷ­னும் நாயகி, நாய­க­னாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா முக்­கிய வேடத்­தில் நடிக்­கி­றார்.

இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு தற்­போது சென்­னை­யி­லும் அதன் சுற்­றுப்­பு­றங்­க­ளி­லும் தொடர்ந்து நடை­பெற்று வரு­கிறது.

அர­சி­யல் பின்­ன­ணி­யு­டன் உரு வாகி வரும் இப்­ப­டத்­தில் அப்­துல் காலிக் என்ற பாத்­தி­ரத்­தில் சிலம் பர­சன் நடித்து வரு­கி­றார்.

நேற்­றைய படப்­பி­டிப்­பின்­போது, சிலம்­ப­ர­சன், கல்­யாணி பிரி­ய­தர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்­ளிட்­டோர் நடிக்­கும் காட்­சி­யைப் பட­மாக்­கி­னார் வெங்­கட் பிரபு. படத்­தின் மிக முக்­கி­ய­மான, கிட்­டத்­தட்ட ஆறு நிமி­டம் கொண்ட காட்­சியை ஒரே 'டேக்' கில் நடித்து அசத்­தி­னார் சிம்பு.

அவர் ஒரு 'சிங்­கிள் டேக்' நடி­கர் என்­பது அனை­வ­ரும் அறிந்­ததே. இருப்­பி­னும், ஆறு நிமிட காட்­சி­யைக் கூட அவர் ஒரே டேக்­கில் அவர் நடித்து முடித்­ததைக் கண்டு, அங்கிருந்த படப்பிடிப்புக் குழுவினர் கைதட்டி பாராட்­டி­னர்.

ரம்­ஜான் பண்­டி­கை­யின்­போது இப்­ப­டத்­தின் முதல் பாடல் வெளி­யாக உள்­ளது.