விஜய்யின் நாயகிக்கு கொரோனா

விஜய்யின் நாயகிக்கு கொரோனா

3 mins read
9550f33f-2d56-4f0f-8fe0-9ff0ed42280a
-

விஜய்­யின் நாயகி பூஜா ஹெக்டே கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது தமிழ்த் திரை­யு­ல­கி­னரை அதிர்ச்­சி­யில் ஆழ்த்தி உள்­ளது.

நெல்­சன் திலீப்­கு­மார் இயக்­கத்­தில், சன் பிக்­சர்ஸ் நிறு­வ­னத் தயா­ரிப்­பில், விஜய் நடிப்­பில் ஜார்­ஜி­யா­வில் நடந்து வந்த 'தள­பதி 65' படத்­தின் முதற்­கட்ட படப்­பி­டிப்பு ஒரு­வ­ழி­யாக முடி­வ­டைந்து சென்­னைக்­குத் திரும்­பி உள்ள­னர் திரைப்­ப­டக் குழு­வி­னர்.

இதனை உறு­திப்­ப­டுத்­தும் வித­மாக சென்னை விமான நிலை­யத்­தில் எடுக்­கப்­பட்ட காெணாளி கள் சமூக வலைத்­த­ளங்­களில் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.

நடி­கர் ஜீவா­வின் 'முக­மூடி' திரைப்­ப­டத்தில் தனது நடிப்புலக வாழ்க்­கை­யைத் தொடங்­கிய பூஜா ஹெக்டே, தற்­போது ஒன்­பது ஆண்­டு­களுக்­குப் பிறகு விஜய்­யின் ஜோடி­யாக நடித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், கடந்த 18 நாட்­க­ளாக ஜார்­ஜி­யா­வில் நடை­பெற்று வந்த படப்­பி­டிப்­பில் விஜய்-பூஜா­வின் காதல், பாடல் காட்­சி­க­ளு­டன் ஒரு சில அதி­ரடி சண்டைக் காட்­சி­க­ளை­யும் அங்கு பட­மாக்கினார் இயக்­கு­நர் நெல்­சன்.

இதன்­பின்­னர், படக்­கு­ழு­வி­னர் சென்னை திரும்­பிய நிலை­யில், பூஜா ஹெக்­டே­வுக்கு திடீர் உடல்­ந­லக்­குறைவு ஏற்­பட்­டது.

இதையடுத்து நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­யில் அவ­ருக்கு கிரு­மித்தொற்று பாதிப்பு இருப்­பது உறு­தி­யானது.

இது­கு­றித்து பூஜா தனது டுவிட்­டர் பதி­வில், ''எனக்கு கிருமித்தொற்று உறு­தி­யாகி உள்­ளது. இத­னால் வீட்­டில் தனி­மைப்­படுத்­திக்­கொண்டு கொரோனா வழி­காட்டி நெறி­மு­றை­க­ளைப் பின்­பற்றி வரு­கி­றேன்.

"என்­னு­டன் தொடர்­பில் இருந்த அனை­வ­ரும் தயவு செய்து கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொள்­ளுங்­கள்.

"உங்­கள் அனை­வ­ரு­டைய அன்­புக்­கும் ஆத­ர­வுக்­கும் மிக­வும் நன்றி. நான் தற்­போது கொஞ்­சம் கொஞ்­ச­மாக குண­மாகி வரு­கி­றேன். தய­வு­செய்து அனை­வ­ரும் வீட்­டி­லேயே பாதுகாப்­பாக இருங்­கள்," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

பூஜா­வின் இந்­தச் செய்­தி­யைக் கேட்டு படக்­கு­ழு­வி­னர் அதிர்ந்­துள்­ள­னர்.

இந்­திய மாடல் அழ­கி­யும் பாலி­வுட் நடிகை யுமான பூஜா ஹெக்டே, மகா­ராஷ்­டி­ரா­வின் தலை­ந­க­ரான மும்­பை­யில் பிறந்து வளர்ந்­த­வர். தாய்­மொழியான துலு­வு­டன், இந்தி, ஆங்­கி­லம், மராத்தி மொழி­யை­யும் சர­ள­மா­கப் பேசு­ப­வர்.

பூஜா­வுக்கு நட­ன­மா­டு­வ­தும் ஆடை அலங்­கார நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­ப­தும் அலாதி பிரி­ய­மாம்.

வர்த்­த­கத்­தில் தனது முது­கலை பட்­டப்­படிப்பை முடித்­துள்ள பூஜா­வுக்கு 'பாகு­பலி' புகழ் பிர­பா­சு­டன் தனிப்­பட்ட முறை­யில் ஒரு பாசம் உள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. இருப்­பி­னும், பூஜாவோ, பிர­பாசோ இது­கு­றித்து எது­வும் கூறா­மல் மௌனம் காத்து வரு­கின்­ற­னர்.

பீட்­சா­வும் பிரி­யா­ணி­யும் நான் சுவைக்க விரும்­பும் உண­வு­கள் என்று கூறும் பூஜா­வுக்கு பாடு­வது, பய­ணம் செய்­வது, நட­ன­மா­டு­வது, புத்­த­கம் வாசிப்­பது முக்கிய பொழுதுபோக்காக ஆகி உள்ளதாகவும் கூறு­கி­றார்.

இதற்கிடையே, விவேக் மறை­வின்போது விஜய்­யின் அம்மா ஷோபா சந்­தி­ர­சே­கர் நேரில் சென்று இறுதி அஞ்­சலி செலுத்­தி­னார். அதே­ச­ம­யம் விஜய் ஓர் இரங்­க­லா­வது தெரி­வித்­தி­ருக்­க­லாம் என விமர்­ச­னங்­கள் எழுந்தன.

இந்­நி­லை­யில், ஜார்­ஜி­யா­வில் இருந்து திரும்­பிய கையோடு தனது நண்பர் விவேக் வீட்­டிற்­குச் சென்று அவ­ரது குடும்­பத்­தி­னரைச் சந்­தித்து ஆறு­தல் தெரி­வித்­துள்­ளார் விஜய்.

நடி­கர் விவேக் விஜய்­யு­டன் சேர்ந்து 'ஷாஜ­கான்', 'உதயா', 'யூத்', 'பத்ரி', 'பிரி­ய­மா­ன­வளே', 'குஷி', 'குருவி' உள்ளிட்ட படங்­களில் நடித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, 'அடங்­க­மறு', 'அயோக்யா' படங்­களில் கதா­நா­ய­கி­யாக நடித்த ராஷி கண்ணா, தற்­போது தெலுங்­கில் நாக­சைதன்யா ஜோடி­யாக 'தேங்க்யூ' என்ற படத்­தில் நடித்து வரு­கி­றார்.

இப்படத்­தின் படப்பிடிப்பு தற்­போது இத்­தா­லி­யில் உள்ள மிலன், டூரின் ஆகிய நக­ரங்­களில் நடை­பெற்று வரு­கிறது.

"இங்கே கிரு மிப்பர­வல் அவ்­வ­ள­வாக இல்லை. மக்­கள் வழக்­கம்­போல சர்­வ­சா­தா­ர­ண­மாக நட­மா­டிக்­கொண்டு உள்­ள­னர். நாங்­கள் தக்க பாது­காப்பு முறையுடன் படப்­பி­டிப்பை நடத்தி வரு­கி­றோம்," என ராஷி கண்ணா கூறி­யுள்­ளார்.