'தாய்நாடுதான் முக்கியம்'

'தாய்நாடுதான் முக்கியம்'

3 mins read
df220b1e-f899-4806-bc41-f5df08452df4
-

கலைக்கு மொழி, நாடு என்­கிற எல்­லை­கள் ஏது­மில்லை. அந்த வகை­யில் ஜார்க்­கண்ட் மாநி­லத்­தில் இருந்து கோடம்­பாக்­கத்­துக்கு வந்­துள்­ளார் ஸ்டெஃபி படேல்.

அழ­கிப் போட்­டி­களில் அசத்­தும் இவரை 'பார்­டர்' படத்­தின் மூலம் தமிழ் பேச அழைத்து வந்­துள்­ள­னர்.

அருண் விஜய் நாய­க­னாக நடிக்­கும் இப்­ப­டத்­தில் கவர்ச்­சி­யி­லும் இளமை துள்­ளும் நடிப்­பி­லும் ரசி­கர்­களை கிறங்­க­டிக்க உள்­ளார் ஸ்டெஃபி. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு 'மிஸ் இந்­தியா', 'டீன் மாடல் இண்­டர்­நே­ஷ­னல்' பட்­டத்தை வென்­ற­வர். இவ­ரது தந்தை அம­ரேந்­தி­ரன் ஒரு தொழி­லதி­பர். தாயார் மாதுரி குடும்­பத் தலைவி. ஒரு அண்­ணன், ஒரு தம்பி, ஒரு தங்கை என மூன்று உடன்­பிறப்­பு­க­ளைக் கொண்­டி­ருப்­ப­வர், அவர்­கள் மூவரும்­தான் தமது உயிர் என்­கி­றார்.

"எனது தந்­தை­யின் குடும்­பம் மிகப் பெரி­யது. எல்­லோ­ரும் பாச­மா­கப் பேசிப் பழ­கு­வார்­கள். எங்­கள் குடும்­ப­மும் பாசத்­தால் பிணைக்­கப்­பட்­ட­து­தான். ஆங்­கில இலக்­கி­யத்­தில் பட்­டப்­ப­டிப்பை முடித்த கையோடு 'மிஸ் இந்­தியா' அழ­கிப் போட்­டி­யில் பங்­கேற்­றேன். அதில் இறு­திச்­சுற்று வரை முன்­னே­றி­ய­தையே பெரிய வெற்­றி­யா­கக் கரு­து­கி­றேன். பள்ளி இறுதி வகுப்­பில் படித்­துக்­கொண்­டி­ருந்­த­போ­து­தான் 'மிஸ் டீன்' பட்­டம் கிடைத்­தது," என்­கி­றார் ஸ்டெஃபி படேல்.

அந்­தச் சம­யத்­தில் ஒரு பற்­பசை விளம்­ப­ரத்­தில் நடித்­தா­ராம். அது­தான் சினிமா வாய்ப்­பைத் தேடிக் கொடுத்­துள்­ளது. இப்­போது இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழி­க­ளி­லும் தலா ஒரு படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார் ஸ்டெஃபி.

அது­மட்­டு­மல்ல, 'பேட்­டில் ஆஃப் டிஃபன்ஸ்' என்ற சீன- ஹாலி­வுட் படத்­தி­லும் நடித்து முடித்­துள்­ளா­ராம். ஸ்டெ­ஃபி­யின் குடும்­பத்­தில் மருத்­து­வர், பொறி­யி­ய­லா­ளர், ஐஏ­எஸ் அதி­காரி எனப் பலர் முக்­கி­யப் பத­வி­களில், பணி­களில் உள்­ள­னர். இவ­ருக்கு மட்­டும் சினிமா துறை­யில் ஆர்­வம் ஏற்­பட்­ட­தாம். தனது தாயும் பாட்­டி­யும்­தான் அழ­கு­ணர்ச்­சியை ஊட்­டி­ய­வர்­கள் என்­கி­றார். சிறு வய­தி­லேயே மாறு­வே­டப் போட்­டி­யில் தேவ­தை­யாக ஒப்­ப­னை­யிட்­டுப் பங்­கேற்­பது, நட­ன­மா­டு­வது எனப் பல­வ­கை­யி­லும் தமது ஆர்­வத்­தை­யும் ஆசை­யை­யும் வெளிப்­ப­டுத்தி உள்­ளார்.

"அந்த ஈடு­பா­டும் திற­மை­யும்­தான் சினிமா என்ற கன­வு­ல­கில் எனக்­கென ஓர் இடத்தை ஏற்­ப­டுத்­தித் தந்­துள்­ளது. சீன ஹாலி­வுட் படத்­தில் 'நார்த்தா' என்ற முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளேன். இந்­தப் படத்­துக்­காக இந்­தியா, தென்­கொ­ரியா, தாய்­லாந்து, பிலி­பீன்ஸ், ஐரோப்­பா­வில் இருந்து தலா ஒரு நடி­க­ரைத் தேர்ந்­தெ­டுத்­த­னர்.

"இந்­தி­யா­வில் இருந்து நூற்­றுக்­க­ணக்­கான நடி­கை­கள் வாய்ப்­புக்­காக முயற்சி செய்­த­னர். ஆனால் நடிப்­புத் தேர்­வின் முடி­வில் நான்­தான் தேர்வு பெற்­றேன். சினிமா வாழ்க்­கை­யின் துவக்­கத்­தி­லேயே உல­க­ள­வில் தயா­ரா­கும் படத்­தில் நடிக்­கும் வாய்ப்பு கிடைக்­கும் என எதிர்­பார்க்­க­வில்லை.

"அதி­லும் கடும் போட்­டிக்கு மத்­தி­யில் தேர்வு பெற்­றது மகிழ்ச்சி அளிக்­கிறது. அதே­ச­ம­யம் அதிர்ஷ்­ட­மும் என் பக்­கம் இருந்­தது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை," என்­கி­றார் ஸ்டெஃபி.

இந்­திய-சீன எல்­லைப் பகு­தி­யில் நடக்­கும் கதை­தான் பட­மாக்­கப்­ப­டு­கிறது. எனவே, காட்சி அமைப்பு பர­ப­ரப்­பாக இருக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் தமது தாய்­நாட்­டின் எல்­லையை இன்­னொரு நாடு ஆக்­கி­ர­மிப்­பதை தம்­மால் சகித்­துக்­கொள்ள இய­லாது என்று தமது தேசப்­பற்றை வெளிப்­ப­டுத்­து­கி­றார் ஸ்டெஃபி.

இந்­திய நாட்­டுக் குடி­ம­க­ளா­கத் தமது தாய்­நா­டும் அதன் நல­னும்­தான் மற்ற அனைத்­தை­யும் விட தமக்­குப் பெரிது என்­கி­றார்

"இந்­தியா, சீனா என்­றில்லை, இந்த உல­கில் உள்ள ஒவ்­வொரு நாட்­டி­னு­டைய இறை­யாண்­மை­யும் மதிக்­கப்­பட வேண்­டும். அனைத்து நாடு­களும் நட்­பு­டன் இருப்­பதே மனித குலத்­துக்கு நல்­லது," என்று பொறுப்­பு­டன் பேசும் ஸ்டெஃபி, தமி­ழில் நடிக்­கும் 'பார்­டர்' படத்­தில் சண்­டைக் காட்­சி­க­ளி­லும் நடித்­துள்­ளா­ராம். படத்­தின் நாய­கன் அருண் விஜய்­யின் நடிப்­பும் அவர் நட்பு பாராட்­டிய வித­மும் தம்மை வெகு­வா­கக் கவர்ந்­துள்­ளது என்­கி­றார்.

"துப்­பாக்கி தூக்­கிச் சண்டை போட­வில்லை. ஆனால் துப்­பாக்கி தோட்டா போல் பாய்ந்து செல்­லும் திரைக்­க­தை­யில் எனக்கு உரிய முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. கதைப்­படி நான் அருண் விஜய்­யின் காதலி. 'பார்­டர்' வெளி­யா­ன­தும் தமி­ழில் நல்ல வாய்ப்­பு­களை எதிர்பார்க்கிறேன்," என்கிறார் ஸ்டெஃபி.

ஒரு குடும்­ப­மாக ஒரு­வரை ஒரு­வர் எவ்­வாறு பாது­காத்­துக் கொள்ள வேண்­டும் என்ற நல்ல விஷ­யத்­தைத் தமி­ழக மக்­க­ளி­டம் இருந்து கற்­றுக்­கொண்­ட­தாக கூறும் ஸ்டெஃபி, 'பார்­டர்' படக்­கு­ழு­வில் உள்ள அனை­வ­ருமே தம்மை அன்­பு­டன் கவ­னித்­துக் கொண்­ட­தாக நெகிழ்­கி­றார்.

, :   

ஸ்டெஃபி படேல்