'தளபதி 65' சுவாரசியங்கள்

'தளபதி 65' சுவாரசியங்கள்

3 mins read
395623ee-786d-4c82-b51f-f93ed51aa148
-

சில எதிர்­பா­ராத தாம­தங்­கள் ஏற்­பட்­டா­லும் 'தள­பதி 65' பட வேலை­கள் தொடர்ந்து நடை­பெற்று வரு­வது விஜய் ரசி­கர்­க­ளுக்கு உற்­சா­க­ம­ளித்­துள்­ளது.

ஜார்­ஜியா நாட்­டில் வெற்­றி­க­ர­மாக படப்­பி­டிப்பை நடத்தி முடித்து ஊர் திரும்­பி­யுள்­ள­னர் அப்­ப­டக்­கு­ழு­வி­னர்.

ஜார்­ஜி­யா­வில் எத்­த­கைய சூழ­லில் படப்­பி­டிப்பு நடை­பெற்­றது என்­பது குறித்து சுவா­ர­சிய தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. அங்­கும் கொரோனா கட்­டுப்­பா­டு­கள் மிகத் தீவி­ர­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­ற­ன­வாம்.

இரவு 9 மணிக்கு மேல் யாரும் வெளியே வரக்­கூ­டாது என்­ப­தால் மாலை 7 மணிக்­குள் படப்­பி­டிப்பை முடித்து படக்­கு­ழு­வில் இருந்த அனை­வ­ரும் தத்­த­மது தங்­கும் விடுதி அறை­க­ளுக்­குத் திரும்பி விடு­வார்­க­ளாம்.

இம்­மா­தம் 6ஆம் தேதி தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லின்­போது தனது வாக்­கைச் செலுத்­திய கையோடு ஜார்­ஜி­யா­வுக்­குப் புறப்­பட்­டார் விஜய். அதற்கு முன்­பா­கவே படக்­கு­ழு­வைச் சேர்ந்த பலர் அங்கு சென்று படப்­பி­டிப்­புக்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­யத் தொடங்­கி­விட்­ட­னர். சுமார் 12 மணி நேர பய­ணத்­துக்­குப் பிறகு டிபி­லிசி நக­ரைச் சென்­ற­டைந்­துள்­ளார் விஜய். அங்கு படப்­பி­டிப்பு துவங்­கும் முன்பு அங்­குள்ள கட்­டுப்­பா­டு­க­ளின்­படி மூன்று நாள்­கள் தம்­மைத் தனி­­மைப்­ப­டுத்­திக் கொண்­டுள்­ளார். அதன்­பி­றகு மூன்று நாள்­க­ளுக்கு ஒரு­முறை கொரோனா பரி­சோ­தனை செய்­யப்­பட்­டுள்­ளது.

படத்­தின் தொழில்­நுட்­பக் குழு­வைச் சேர்ந்த இரு­வ­ருக்கு ஜார்­ஜியா சென்­ற­டைந்­த­துமே உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­தாம். இதை­ய­டுத்து அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

முத­லில் சண்­டைக்­காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்­டன. பாடல் காட்­சிக்கு திட்­ட­மி­டப்­பட்­டிருந்தபோதும் அது கைகூ­ட­வில்­லை­யாம்.

கார் துரத்­தல் காட்சி ஒன்­றைத்­தான் விரி­வாக காட்­சிப்­ப­டுத்தி உள்­ள­னர். இந்த சண்­டைக் காட்­சியை காஷ்­மீ­ரில் பட­மாக்­கத்­தான் முத­லில் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். ஆனால் அங்கு படப்­ப­டிப்­பின்­போது ஏதா­வது சிக்­கல்­கள் எழ­லாம் என்­ப­தால் படப்­பி­டிப்­புக் களம் ஜார்­ஜி­யா­வுக்கு மாற்­றப்­பட்­டது.

தின­மும் படப்­பி­டிப்பு முடிந்­த­தும் உட­ன­டி­யாக தனது தங்­கும் விடுதி அறைக்­குள் முடங்கி விடு­வா­ராம் விஜய். இரண்டு முறை மட்­டும் சில பொருட்­கள் வாங்­கு­வ­தற்­காக வெளியே வந்­தி­ருக்­கி­றார்.

படப்­பி­டிப்பு இல்­லாத சம­யங்­களில் அறையை விட்டு அறவே வெளியே வர­வில்லை விஜய் என்­கி­றார்­கள். முழுக்க முழுக்­கத் தனி­மை­யி­லேயே இருந்­த­போது நெருக்­க­மா­ன­வர்­க­ளு­டன் தொலை­பே­சி­யில் பேசிக் கொண்­டி­ருந்­தா­ராம்.

படப்­பி­டிப்­பின்­போது டிபி­லிசி நக­ரில் படிக்­கும் இந்­திய மாண­வர்­கள் சிலர் விஜய்­யைச் சந்­திக்க வந்­துள்­ள­னர். அவர்­க­ளோடு செல்ஃபி எடுத்­துக்­கொண்டு, சிறிது நேரம் பேசி உற்­சாகப்­படுத்தி அனுப்­பி­யுள்­ளார்.

படப்­பி­டிப்பு முடிந்­த­தும் உட­ன­டி­யாக சென்னை திரும்­பி­ய­ விஜய், மறு­நாளே நடி­கர் விவேக் வீட்­டிற்­குச் சென்று துக்­கம் விசா­ரித்­தி­ருக்­கி­றார்.

விவேக் கால­மா­ன­போது ஜார்­ஜி­யா­வில் இருந்­த­தால் நேரில் அஞ்­சலி செலுத்த முடி­ய­வில்லை என்று அவர் மிக­வும் வருத்­தம் அடைந்­தா­ராம்.

இரு­வ­ரும் பல படங்­களில் இணைந்து நடித்­துள்­ள­னர். அவற்­றில் இடம்­பெற்ற விவேக்­கின் நகைச்­சுவை வச­னங்­க­ளுக்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­தது.

விவேக் கால­மான தக­வ­லைக் கேள்­விப்­பட்ட நாளில், விஜய் யாரு­ட­னும் அதி­கம் பேச­வில்­லை­யாம். விஜய் இரங்­கல் செய்­தி­யா­வது விடுத்­தி­ருக்­க­லாம் என்று சிலர் குறை­கூ­றி­னர். இந்­நி­லை­யில் அவர் நேரில் சென்று துக்­கம் விசா­ரித்­த­தும் சர்ச்­சை­யாகி உள்­ளது. வெளி­நாடு சென்று திரும்­பி­ய­வர் இரு வார காலம் தம்­மைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்ட பிறகே வெளியே செல்­ல­வேண்­டும் என்­பது விஜய்க்­குத் தெரி­யாதா என்று சிலர் கேள்வி எழுப்பி உள்­ள­னர். ஒரு­வார தனி­மைப்­ப­டுத்­த­லுக்­குப் பிறகு மே 3ஆம் தேதி விஜய் 'தள­பதி 65' படத்­தின் படப்­பி­டிப்­பைத் தொடங்­கத் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

எனி­னும் தமி­ழ­கத்­தில் கிரு­மித்­தொற்­றுப் பர­வல் மோச­ம­டைந்­தி­ருப்­ப­தால் படப்­பி­டிப்பு தள்­ளிப்­போக வாய்ப்பு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தொற்­றுப்­ப­ர­வல் அதி­க­ரித்து வரு­வ­தால் படப்­பி­டிப்­புக்கு அவ­ச­ரப்­பட வேண்­டாம் என தயா­ரிப்­புத் தரப்­பி­டம் விஜய் கூறி­யுள்­ள­தா­கத் தக­வல்.

எனி­னும் இந்­தாண்டு இறு­திக்­குள் 'தள­பதி 65' படத்தை வெளி­யிட வேண்­டும் என்­ப­தில் அவர் முனைப்­பாக உள்­ளா­ராம்.