இணையத்தில் வெளியாகும் தனுஷ் படம்

இணையத்தில் வெளியாகும் தனுஷ் படம்

1 mins read
6cd479e4-045c-4952-afd7-2ccb74a5dde2
-

கார்த்­திக் சுப்­பு­ராஜ் இயக்­கத்­தில் தனுஷ் நடித்­தி­ருக்­கும் 'ஜகமே தந்­தி­ரம்' திரைப்­ப­டம் ஜூன் மாதம் 18ஆம் தேதி நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­கிறது. இது குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

இணை­யத்­தில் வெளி­யிட தனுஷ் முன்பு எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தார். இந்­நி­லை­யில் மனம் மாறி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஹாலி­வுட் நடி­கர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்­வர்யா லட்­சுமி, லால் ஜோஸ், கலை­ய­ர­சன், ராசுக்­குட்டி உள்­ளிட்ட பலர் இந்­தப் படத்­தில் நடித்­துள்­ள­னர்.

சந்­தோஷ் நாரா­ய­ணன் இசை­ய­மைக்க, ஸ்ரே­யாஸ் கிருஷ்ணா ஒளிப்­ப­திவு செய்­துள்­ளார்.

பெரும் பொருட்­செ­ல­வில் உரு­வான 'ஜகமே தந்­தி­ரம்' கொரோனா அச்­சு­றுத்­தல் தொடங்­கும் முன்பே வெளி­யீடு காண தயா­ரா­கி­விட்­டது.

ஊர­டங்கு வேளை­யில் ஓடிடி வெளி­யீட்­டுப் பேச்­சு­வார்த்­தை­யில் படக்­குழு ஈடு­பட்­டது. ஆனால், திரை­ய­ரங்­கு­க­ளில்­தான் படத்தை வெளி­யிட வேண்­டும் என தனுஷ் தரப்­பில் வலி­யு­றுத்­தப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது. இது­கு­றித்து அப்­போது தயா­ரிப்­பா­ளர் தரப்­பில் எந்­தக் கருத்­தும் தெரி­விக்­க­வில்லை.

இந்­நி­லை­யில் பிர­பல நிறு­வ­னம் 'ஜகமே தந்­தி­ரம்' படத்­தின் வெளி­யீட்டு உரி­மை­யைப் பெற்­றுள்­ளது. படத்­துக்கு 18+ என்­கிற மதிப்­பீடு கொடுக்­கப்­பட்­டுள்­ளது. எனவே 18 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் மட்­டுமே பார்க்க உகந்த திரைப்­ப­ட­மாக 'ஜகமே தந்­தி­ரம்' மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஜூன் 18ஆம் தேதி அன்று படம் இணையத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.