இணையத்தில் வெளியாகும் சேதுபதி நடித்த படங்கள்

இணையத்தில் வெளியாகும் சேதுபதி நடித்த படங்கள்

1 mins read
6ed4df10-ae75-4bd3-904f-607b9188e041
'மாமனிதன்' படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி. -

தமி­ழ­கத்­தில் திரை­ய­ரங்­கு­களை மூட அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது. எனவே அடுத்த இரு மாதங்­க­ளுக்கு திரை­ய­ரங்­கு­களில் வெளி­யீடு காண இருந்த படங்­களை நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யிட பேச்­சு­வார்த்தை நடந்து வரு­கிறது.

விஜய் சேது­பதி நடித்த 'துக்­ளக் தர்­பார்' இணை­யத்­தில் வெளி­யா­வது உறு­தி­யாகி உள்­ளது.

இதை­ய­டுத்து சேது­பதி நடிப்­பில் உரு­வாகி உள்ள 'பீட்சா 3', 'மாம­னி­தன்', 'லாபம்', 'யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்', 'கடைசி விவ­சாயி' ஆகிய படங்­களும் வெளி­யீடு காணத் தயா­ராக உள்­ளன. எனவே அவற்­றை­யும் ஓடிடி தளங்­களில் வெளி­யிட தயா­ரிப்­பா­ளர்­கள் முயற்சி மேற்­கொண்­டுள்­ள­தா­கத் தக­வல். இதே­போல் நயன்­தாரா நடித்­துள்ள 'நெற்­றிக்­கண்', திரி­ஷா­வின் 'ராங்கி' ஆகிய படங்­க­ளின் தயா­ரிப்­புத் தரப்­பும் இணைய நிறு­வ­னங்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்­றன.