சமந்தா: நானும் தவறுகள் செய்கிறேன்

சமந்தா: நானும் தவறுகள் செய்கிறேன்

2 mins read
a2598433-57a2-4ea3-8d3c-03c1ba33f5bb
-

'சாகுந்­த­லம்' மூலம் புரா­ணப் படத்­தில் முதன்­மைக் கதா­பாத்­தி­ர­மாக நடிக்­கும் ஆசை நிறை­வேறி உள்­ள­தா­கச் சொல்­கி­றார் சமந்தா.

ஒவ்­வொரு கதா­பாத்­தி­ரம் மூல­மா­க­வும் சில விஷ­யங்­க­ளைத் தொடர்ந்து கற்­றுக்­கொள்ள முடி­கிறது என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் கூறி­யுள்­ளார்.

"ஒரு கதா­நா­ய­கி­யின் பாத்­தி­ரப் படைப்பை வைத்து நம்­மி­டம் என்­னென்ன குறை­கள் உள்­ளன என்­பதை எளி­தில் எடை­போட்டு­விட முடி­யும்.

"நாம் எதை­யெல்­லாம் மாற்றிக்கொள்ள வேண்­டும் என்பதையும் எத்­த­கைய நன்­மை­களை அத­னால் பெற முடி­யும் என்­ப­தை­யும் தெரிந்­து­கொள்ள முடி­கிறது.

"திரை­யில் எத்­த­னையோ கதா­பாத்­தி­ரங்­களில் நாங்­கள் நடிக்­கி­றோம். அதற்­காக உல­கத்­தில் உள்ள எல்லா விஷ­யங்­களும் கலை­ஞர்­க­ளுக்­குத் தெரி­யும் என்று ரசி­கர்­கள் நினைத்­தால் அது தவறு," என்­கி­றார் சமந்தா.

சினிமா என்­பது வேறு, வாழ்க்கை என்­பது வேறு என்­பதை தாம் நன்கு உணர்ந்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், சாதா­ர­ண பெண் என்ற வகை­யில் தமக்­கும் சில எல்­லை­கள் இருப்­பதை அறிந்து வைத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"தென்­னிந்­தி­யா­வில் முன்­னணி நடி­கர்­கள் எல்­லோ­ரு­ட­னும் நடித்து விட்­டேன். இப்­போது தெலுங்­கில் 'சாகுந்­த­லம்' படத்­தில் நடித்து வரு­கி­றேன். இப்­ப­டி­யொரு புரா­ணப் படத்­தில் நடிப்­பது மகிழ்ச்சி அளித்­துள்­ளது.

"இது­போன்ற கதா­பாத்­தி­ரங்­கள் நம் வாழ்க்­கையை மேலும் மேம்­ப­டுத்­தும். அனை­வ­ரை­யும் போல நானும் தவ­று­கள் செய்­வது இயல்­பு­தான்.

"என்னை ரசி­கர்­க­ளின் கோணத்­தில் இருந்து பார்த்து அவ்­வப்­போது எடை­போட்­டுக் கொள்­வேன். இந்த நடை­முறை பலன் அளிக்­கிறது," என்­கி­றார் சமந்தா.

தமிழ், தெலுங்கு என இரு மொழி­களில் வெளி யாக உள்­ளது 'சாகுந்­த­லம்'.

கொரோனா விவ­கா­ரம் கார­ண­மாக இப்­ப­டத்தை நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யி­ட­வும் வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.