விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் 'பகையே காத்திரு'. அவரது ஜோடியாக ஸ்முருதி வெங்கட் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் மணிவேல் இயக்கும் இப்படம் முழுநீள அதிரடி, திகில் நிறைந்த படைப்பாக உருவாகிறது.
வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
ஷாம் சி.எஸ் இசை அமைக்க, திலீப் சுப்ராயன் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார்.
"இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவின் கதாபத்திரம் வித்தியாசமாக இருக்கும். அவரிடம் இருந்து மாறுபட்ட நடிப்பை எதிர்பார்க்கலாம். சண்டைக் காட்சிகள் முக்கியம் என்பதால் திலீப் சுப்ராயன் மாஸ்டர் அதிகம் மெனக்கெட்டுள்ளார். ஒவ்வொரு சண்டைக் காட்சியும் ரசிகர்களை மிரள வைக்கும்.
"கொச்சி, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படம் திரைகாணும்," என்கிறார் இயக்குநர் மணிவேல்.
விக்ரம் பிரபுவுக்கு கதை பிடித்துப்போனதால் மிகுந்த நம்பிக்கையுடன் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
சண்டைக் காட்சிகளில் நடிக்க அவர் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

