வருமானமின்றி தவிக்கும் அப்புக்குட்டி

1 mins read

கொரோனா விவகாரத்தால் படப்பிடிப்புகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் வாய்ப்பும் வருமானமும் இன்றி தவிப்ப தாக கூறியுள்ளார் நடிகர் அப்புக்குட்டி. 'அழகர்சாமி குதிரை' படத்துக்குப் பிறகு இவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

"கொரோனா ஊரடங்கால் கடந்தாண்டு மிகவும் சிரமப்பட்டேன். இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு வரும் என்கிறார்கள். அதை எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்பது தெரியவில்லை," என்று அப்புக்குடி கூறி உள்ளார். இவரைப் போல் பல துணை நடிகர்களும் படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இன்றி தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.