'கடவுள் அருள்தான் காரணம்'

'கடவுள் அருள்தான் காரணம்'

3 mins read

தமி­ழில் நடன இயக்­கு­நர் பிருந்தா இயக்­கும் 'ஹே சினா­மிகா', தெலுங்­கில் சர்­வா­னந்­து­டன் 'மகா சமுத்­தி­ரம்' என்று ஆறு படங்­களில் நடித்­துக்கொண்­டி­ருக்­கி­றார் அதி­தி­ராவ் ஹைதரி.

அண்­மை­யில் இவர் நடித்து வெளி­யான 'த கேர்ள் ஆன் த ட்ரெ­யின்' படத்­துக்கு இணை­யத்­தில் பெரும் வர­வேற்புக் கிடைத்­துள்­ளது. இதை­ய­டுத்து மேலும் ஒரு பட­மும் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யாக உள்­ள­தா­க­வும் அதன் வெளி­யீட்டு உரிமை கணி­ச­மான தொகைக்கு விலை போயி­ருப்­ப­தா­க­வும் உற்­சா­கத்­து­டன் சொல்­கி­றார் அதிதி.

ஊர­டங்­கின்­போது வீட்­டில் முடங்க நேரிட்­டா­லும் பல பய­னுள்ள விஷ­யங்­களில் ஈடு­பட்­ட­தா­கச் சொல்­கி­றார். விட்­டி­லுள்ள பழைய மரத்­தி­னா­லான மேசை நாற்­கா­லி­க­ளைத் தேடிப்­ பிடித்து அவற்­றுக்கு வர்­ணம் பூசி­னா­ராம். மற்ற சில நடி­கை­க­ளைப்­போல் இவ­ரும் உடற்­ப­யிற்­சி­யில் கவ­னம் செலுத்தி உள்­ளார்.

"உட­லைக் கட்­டுக்­கோப்­ப­காக வைத்­தி­ருக்க எந்த அளவு மெனக்­கெ­டு­கி­றேனோ அதே அள­வி­லான ஈடு­பாட்டை உணவு விஷ­யத்­தி­லும் கடைப்­பி­டிக்­கி­றேன். அதா­வது நான் ஒரு சாப்­பாட்­டுப் பிரியை. பிடித்­த­மான உணவு வகை­களை அள­வின்றிச் சாப்­பி­டு­வேன்.

"ஹைத­ரா­பாத் பிரி­யாணி, கீமா, கிச்­சடி ஆகி­ய­வற்றை நன்­றா­கச் சாப்­பி­டு­வது மட்­டு­மல்ல, சமைக்­க­வும் தெரி­யும். அனைத்­தை­யும் விட முக்­கி­ய­மாக கடந்த ஊர­டங்­கின்­போது பீட்சா செய்­யக் கற்­றுக்­கொண்­டேன்," என்று சொல்­லும் அதிதி ராவுக்கு, முறைப்­படி பாலே நட­னம் கற்­றுக்­கொள்ள ஆசை­யாம்.

சிறு வய­தில் பல­முறை இதற்­குத் திட்­ட­மிட்­ட­போ­தும் இவர் ஆசைப்­பட்­டது நடக்­க­வில்லை. ஊர­டங்­கின்­போ­தும் இணை­யம் வழி கற்­கத் திட்­ட­மிட்­டா­ராம். அது­வும் சாத்­தி­ய­மா­க­வில்லை.

"இனி­மேல் எப்­போது வாய்ப்­பும் நேர­மும் கிடைக்­கும் எனத் தெரி­ய­வில்லை. ஆனால் எப்­போது ஓய்வு கிடைத்­தா­லும் நடன வகுப்­பில் சேர்ந்­து­வி­டு­வேன். தற்­போது எனக்­கேற்ற கதா­பாத்­தி­ரங்­க­ளைத் தேர்வு செய்­வ­தில் மிகுந்த கவ­னம் செலுத்தி வரு­கி­றேன். கார­ணம், இது­வரை நான் நடித்த அனைத்து மொழிப் படங்­க­ளுமே எனக்கு நல்ல பெய­ரைப் பெற்­றுத் தந்­துள்­ளன.

"அர்ப்­ப­ணிப்­பு­டன் கூடிய எனது நடிப்­பும் உழைப்­பும் இதைச் சாத்­தி­ய­மாக்கி உள்­ளன. கடி­ன­மாக உழைப்­பது மட்­டும்­தான் எனக்­குத் தெரிந்த ஒரே விஷ­யம். ஆனால், அந்த உழைப்பை அழ­காக செதுக்கி என் நடிப்பை மெரு­கேற்­று­வது இயக்­கு­நர்­கள்­தான்.

"இப்­படி எல்­லாமே எனக்கு நல்­ல­வி­த­மாக அமைய கட­வு­ளின் அருள்­தான் ஒட்­டு­மொத்­தக் கார­ணம் எனக் கரு­து­கி­றேன். கட­வுள் அருள்­தான் நல்ல கதா­பாத்­தி­ரங்­க­ளை­யும் இயக்­கு­நர்­க­ளை­யும் என்னை நோக்கி வர­வைக்­கின்­றன," என்­கி­றார் அதிதி.

குடும்­பப்­பாங்­கான பெண்­ணாக மட்­டு­மல்­லா­மல் கவர்ச்­சி­யி­லும் இவர் அசத்­து­கி­றார். அதே­ச­ம­யம் இந்­தக் கவர்ச்சி விவ­கா­ரம் இவரை விமர்­ச­னத்­துக்­கும் ஆட்­பட வைத்­துள்­ளது.

"கவர்ச்­சி­யாக நடிப்­பது ஒன்­றும் கெட்ட விஷ­யம் அல்ல. கவர்ச்­சி­யை­யும் நான் மிக­வும் நேசிக்­கி­றேன். அது அற்­பு­த­மான விஷ­யம். எல்­லோ­ரா­லும் கவர்ச்­சி­யாக நடிக்­க­மு­டி­யாது," என்­கி­றார் அதிதி ராவ்.

இவ­ரைக் காத­லிப்­ப­தாக பலர் சொல்லி இருக்­கி­றார்­க­ளாம். ஆனால், தமக்கு இது­வரை யார் மீதும் காதல் ஏற்­பட்­ட­தில்லை என்­கி­றார்.

"நிறைய ரசி­கர்­கள் என்­னி­டம் காதலை வெளிப்­ப­டுத்­தும்­போது நாசூக்­காக ஒதுக்­கி­வி­டு­வேன். ஒரு­முறை துருக்கி சென்­றி­ருந்­த­போது அங்­குள்ள ஒரு ரசி­கர், "நீங்­கள் எங்­கி­ருந்து வந்­தி­ருக்­கி­றீர்­கள்' என்று கேட்­டார். இந்­தி­யா­வி­லி­ருந்து வந்­தி­ருப்­ப­தாக சொன்­னேன். உடனே என்­னைப் பார்த்து காத­லு­டன் சிரித்­த­வர், 'சொர்க்­கத்­தில் இருந்து வந்­தி­ருக்­கி­றீர்­களோ என்று நினைத்­தேன்' என்­றார்.

"இப்­படி பல காதல் வச­னங்­க­ளை­யும் கேட்­டி­ருக்­கி­றேன். இது­வரை நான் யாரை­யும் காத­லித்­த­தில்லை என்­ப­து­தான் உண்மை. காதல் என்­பது அற்­பு­த­மான உணர்வு. அதை மறைக்­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

"இது­வரை நான் அதி­கம் நேசித்த விஷ­யம் என்­றால் அது பய­ணம் மேற்­கொள்­வ­து­தான். அனைத்து நாடு­க­ளுக்­கும் செல்­ல­வேண்­டும் எனும் ஆசை உண்டு. எனக்கு மிக­வும் பிடித்­த­மான இடம் லண்­டன். அங்­குள்ள ஒவ்­வொரு தெரு­வும் எனக்கு அத்­துப்­படி," என்­கி­றார் அதிதி ராவ்.