குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் சந்தீப்

கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு திரை­யு­ல­கத்­தி­னர் முடிந்த உத­வி­க­ளைச் செய்து வரு­கின்­ற­னர்.

அந்த வகை­யில் கொரோ­னா­வால் பெற்­றோரை இழந்த குழந்தை­களுக்கு உத­விக்­க­ரம் நீட்டி உள்­ளார் நடி­கர் சந்­தீப் கிஷன்.

'மாந­க­ரம்', 'மாய­வன்' உள்­ளிட்ட படங்­களில் நடித்­துள்ள சந்­தீப், தமது சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் இது தொடர்­பாக பதி­விட்­டுள்­ளார்.

"இந்­தச் சவா­லான கால­கட்­டத்­தில் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக கொரோனா தொற்­றால் தங்­கள் பெற்­றோரை இழந்த குழந்­தை­கள் குறித்து உங்­க­ளுக்­குத் தெரிய வந்­தால் எனக்­குத் தக­வல் தெரி­வி­யுங்­கள்.

"நானும் எனது குழு­வி­ன­ரும் எங்­க­ளது சக்­திக்­குட்­பட்ட வகை­யில் அந்­தக் குழந்­தை­க­ளின் அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்­கான உணவு, கல்­விக்­கான பொறுப்பை ஏற்­றுக்­கொள்­கி­றோம்," என்று சந்­தீப் கிஷன் தெரி­வித்­துள்­ளார்.

இது சோத­னை­யான கால­கட்­டம் என்­றும் இச்­ச­ம­யத்­தில் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் உறு­து­ணை­யாக இருப்­பது மிக முக்­கி­யம் என்­றும் அவர் தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

கொரோனா ஊர­டங்­கின்­போது புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­க­ளுக்கு பல்­வேறு வகை­யி­லும் உத­வி­கள் செய்­த­வர் நடிகை சோனு சூட்.

இதை­ய­டுத்து சில பகு­தி­களில் அவ­ருக்கு கோவில்­கள் கூட கட்­டப்­பட்­டுள்­ளன. இந்­நி­லை­யில் சில தினங்­க­ளுக்கு முன்­னர் உயி­ருக்­குப் போரா­டிய கொரோனா நோயா­ளி­யைக் காப்­பாற்ற ஆம்­பு­லன்ஸ் விமா­னம் ஒன்றை தன் செல­வில் அனுப்பி உதவி உள்­ளார் சோனு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!