கணேஷ் நடிக்கும் 'உன் பார்வையில்'

கணேஷ் நடிக்கும் 'உன் பார்வையில்'

1 mins read
3c0b21d3-e8e1-4529-9b45-937e24b982c1
'உன் பார்வையில்' படத்தில் கணேஷ் வெங்கட்ராம், பார்வதி நாயர். -

கணேஷ் வெங்­கட்­ராம் நடிப்­பில் உரு­வா­கும் புதிய படம் 'உன் பார்­வை­யில்'. பாலி­வுட் ஒளிப்­ப­தி­வா­ளர் கபீர் லால் இயக்­கு­கி­றார்.

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழி­களில் இப்­ப­டத்தை வெளி­யிட உள்­ள­னர். பார்­வதி நாயர் நாய­கி­யாக நடிக்­கி­றார்.

"இது காத­லும் திகி­லும் கலந்த கதையை மைய­மா­கக் கொண்டு உரு­வா­கும் படம். உளவியல் நிபு­ண­ராக கணே­ஷும் தொழில் அதி­ப­ராக பார்­வதி நாய­ரும் நடிக்­கின்­ற­னர்.

"இரு­வ­ருக்­கும் இடை­யே­யான உடல் மொழி அனை­வ­ரை­யும் கவ­ரும் வகை­யில் இருக்­கும்," என்­கி­றார் இயக்­கு­நர் கபீர் லால்.

"இது­போன்ற படத்­தி­லும் கதா­பாத்­தி­ரத்­தி­லும் நடிக்­கத்­தான் ஆர்­வத்­து­டன் காத்­தி­ருந்­தேன். கபீர் லால் என்­னி­டம் கதையை விவ­ரித்­த­போதே பர­ப­ரப்­பா­க­வும் சுவா­ர­சி­ய­மா­க­வும் உணர்ந்­தேன்.

"தாம் சொன்­ன­தற்கு ஏற்ப அழ­கான, தர­மான படைப்பை அவர் தரு­வார் என நம்­பிக்கை உள்­ளது," என்­கி­றார் கணேஷ் வெங்­கட்­ரா­மன்.

தமக்குச் சவாலான கதாபாத்திரம் அமைந்திருப்பதாகச் சொல்கிறார் பார்வதி.