பிரியாமணி: ஆறு மொழிகளில் நடிப்பேன்

பிரியாமணி: ஆறு மொழிகளில் நடிப்பேன்

2 mins read
9f86a09f-0938-4b5e-b4fb-e3978cbb1a4e
பிரியாமணி, :    -

"திரு­ம­ண­மாகி நான்­காண்­டு­கள் ஆகி­விட்­டன. இன்­ற­ள­வும் எனக்­கான வாய்ப்­பு­கள் தேடி வரு­கின்­றன. நல்ல கதா­பாத்­தி­ரங்­கள், நல்ல படக்­குழு, நல்ல ஊதி­யம் என எனது திரை­யு­ல­கப் பய­ணம் மகிழ்ச்­சி­யாக சென்று கொண்­டி­ருக்­கிறது," என்று உற்­சா­க­மா­கப் பேசு­கி­றார் பிரி­யா­மணி.

தற்­போது கைவ­சம் ஆறு புதிய படங்­கள், இரண்டு இணை­யத் தொடர்­கள் என்று இந்­தப் பெருந்­தொற்று காலத்­தி­லும் பர­ப­ரப்­பாக வலம்­வ­ரும் நாயகி இவர்­தான்.

"நான் பெங்­க­ளூ­ரு­வில் பிறந்து வளர்ந்­த­வள். இருப்­பி­னும் தமிழ்ப்­பெண்­ணான எனது பூர்­வீ­கம் கேரளா. நன்­றா­கத் தெலுங்கு பேசு­வேன். தற்­போது மும்­பை­யில் வசித்து வரு­கி­றேன்.

"தமிழ், தெலுங்கு, இந்தி உள்­ளிட்ட ஆறு மொழி­களில் என்­னால் சர­ள­மா­கப் பேச­மு­டி­யும். அந்த மொழி­களில் பல­வி­த­மான கதா­பாத்­தி­ரங்­களை ஏற்று நடிக்க நான் தயார். அதற்­கான வாய்ப்­பு­கள் கிடைக்­கு­மென நம்­பு­கி­றேன்," என்­கி­றார் பிரியா.

இப்­போது இவரை இன்ஸ்­ட­கிராம் தளத்­தில் ஒரு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் பின்­தொ­டர்­கி­றார்­கள். தெலுங்­கில் வெங்­க­டேஷ் ஜோடி­யாக 'அசு­ரன்' மறு­ப­திப்­பி­லும் ராணா டகு­ப­தி­யு­டன் 'விராட பரு­வம்' படத்­தி­லும் நடித்து வரு­கி­றார் பிரியா.

இந்­தி­யில் இவர் நடித்த 'மைதான்' மிக விரை­வில் வெளி­யீடு காண உள்­ளது. 'த ஃபேமிலி மேன்' இணை­யத் தொட­ரின் இரண்­டாம் பாகத்­தி­லும் 'ஹிஸ் ஸ்டோரி' என்ற இணை­யத்­தொ­ட­ரி­லும் நடித்­துள்­ளார்.

"திரைப்­ப­டங்­களில் நடித்­துக்­கொண்டே தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யி­லும் என்­னால் பங்­கேற்க முடி­கிறது. நடன நிகழ்ச்சி ஒன்­றில் நடு­வ­ராக உள்­ளேன். அனைத்­துக்­கும் எனக்கு நேரம் கிடைப்­பது எனக்கே ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது.

"30 வய­தைக் கடந்­து­விட்ட நிலை­யில் மன­நி­றைவு தரும் கலை­யு­லக வாய்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யில் மும்­பைக்­கும் துபாய்க்­கும் இடையே இடை­வி­டா­மல் பறந்து கொண்­டி­ருக்­கி­றேன். கொரோனா இரண்­டாம் அலை பல­ரது வாழ்க்­கை­யில் விளை­யாடி வரு­கிறது. ஆனால், என்­னால் அனைத்­துப் பணி­க­ளை­யும் தடை­யின்றி செய்ய முடி­கிறது.

"உண்­மை­யில் மிகப்­பெ­ரிய புதிர் கட்­டத்­தின் ஒவ்­வொரு பகு­தி­யும் தன்­னால் உரிய இடங்­களில் விழுந்­து­விட்­டது போல் உணர்கி றேன். எனது திரு­மண, திரை யுல­கப் பய­ண­மும் வளர்ச்­சி­யும் சீராக உள்­ளன," என்­கி­றார் பிரி­யா­மணி.

இணை­யத் தொடர்­களில் நடிப்­பது ஓர­ளவு வச­தி­யாக உள்­ளது என்று குறிப்­பி­டு­ப­வர், அவற்­றின் படப்­பி­டிப்­பும் வேக­மாக நடப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"படப்­பி­டிப்­பின்­போதே பல பட வேலை­க­ளைக் கச்­சி­த­மாக முடித்து விடு­கி­றார்­கள். ஒரே சம­யத்­தில் இரண்டு கேம­ராக்­கள் வைத்து காட்­சி­கள் பட­மாக்­கப்­ப­டு­கின்­றன. ஒரே­நா­ளில் ஆறு காட்­சி­கள் வரை பட­மாக்­கப்­ப­டு­கின்­றன.

"பிறகு அலு­வ­ல­கத்­தில் இருந்து வீடு திரும்­பு­வது போல் படப்­பி­டிப்­புத் தளத்­தி­லி­ருந்து கிளம்­பி­வி­ட­லாம்," என்று சொல்­லும் பிரி­யா­மணி, இந்­தாண்டு கோடை விடு­மு­றைக்கு எங்­கும் செல்ல முடி­ய­வில்லை என்று வருந்­து­கி­றார்.

திரு­ம­ணத்­துக்­குப் பிறகு கண­வ­ரு­டன் காத­லு­டன் கூடிய ஓர் ஒப்­பந்­தத்தை செய்து கொண்­டுள்­ளா­ராம்.

"இரு­வ­ருமே எங்­க­ளது தொழி­லில் பர­ப­ரப்­பாக இருக்­கி­றோம்.

"ஆனால், எங்­க­ளைச் சுற்றி என்ன நடந்­தா­லும் கோடைக்­கா­லத்­தி­லும் புத்­தாண்டு வேளை­யி­லும் விடு­மு­றை­யில் எங்­கா­வது செல்­ல­வேண்­டும் என்­ப­து­தான் அந்த ஒப்­பந்­தம். ஆனால், தொற்­றுப்­ப­ர­வல் இடை­யூ­றாக இருக்­கிறது," என்று ஏக்­கத்­து­டன் சொல்­கி­றார் பிரி­யா­மணி.