திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
96cd00ce-1264-4b86-a815-da23df6a8d22
-
multi-img1 of 2

நெல்லை சிவா காலமானார்

பிரபல நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் நெல்லை சிவா உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது.

நெல்லைத் தமிழில் சரளமாகப் பேசி தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நெல்லை சிவா. சுமார் 40 ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்த அவர், அண்மைய சில ஆண்டுகளாக தொலைக்காட்சி தொடர்களிலும் முத்திரை பதித்து வந்தார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் அவர் காலமானார். நெல்லை மாவட்டம் பனங்குடி பகுதியில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.

அன்பு சகோதரர்: நெகிழும் அமலா

தமது சகோதரர் ஒருமுறை கூட தன்னை குறை கூறியதோ ஏசியதோ இல்லை என்கிறார் அமலாபால்.

தனது பெற்றோரின் அன்பு கிடைக்காதபோது தாயாகவும் தந்தையாகவும் இருந்து ஆறுதல்படுத்தியது தமது சகோதரர் அபிஜித்தான் என்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"நீ என் சகோதரன் என்பதைவிட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயரத்தில் இருக்கிறாய். வாழ்க்கையின் கடினமான நேரங்களில் என்னோடு இருந்து சந்தோஷப்படுத்தி இருக்கிறாய்.

"என்னை வழிநடத்திய நீதான் எனது ஒட்டுமொத்த குடும்பம், ஆசிர்வாதம், சிறந்த நண்பன். நீ நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன்" என்று தமது பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் அமலாபால்.