'கவனமாக இருந்தும் பாதிக்கப்பட்டேன்'

'கவனமாக இருந்தும் பாதிக்கப்பட்டேன்'

2 mins read
26c11157-7f18-43d8-bca2-d3c375dd341e
சுனைனா -

திரை­யு­ல­கத்­தி­னர் தொடர்ந்து கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள்.

அந்­தப் பட்­டி­ய­லில் நடி­கை­கள் சுனைனா, கேப்­ரி­யலா உள்­ளிட்­டோர் சேர்ந்­துள்­ள­னர்.

அலட்­சி­ய­மாக இருந்­தால் கிரு­மித்­தொற்று ஏற்­படும் என்­பதை உணர்ந்து தாம் மிகுந்த எச்­ச­ரிக்­கை­யு­டன் இருந்­த­தா­கச் சொல்­கி­றார் சுனைனா. ஆனால், அதை­யும் மீறி அவ­ருக்கு தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

"நிபு­ணர்­கள் கூறிய அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொண்­டேன். அதை­யும் மீறி பாதிக்­கப்­பட்­டுள்­ளேன். இனி அதி­லி­ருந்து மீள்­வது குறித்து யோசிக்க வேண்­டும்.

"கொரோனா வழி­காட்டி விதி­முறை­க­ளைப் பின்­பற்றி வீட்­டி­லேயே என்னை தனி­மைப்­ப­டுத்­திக் கொண்­டுள்­ளேன். எனது வீட்­டா­ரும் தனி­மை­யில் உள்­ள­னர்.

"அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணி­யுங்­கள். வீட்­டிலேயே பாது­காப்­பாக இருங்­கள்," என்று கூறி­யுள்­ளார் சுனைனா.

இதற்­கி­டையே 'பிக்­பாஸ்' புகழ் கேப்­ரி­ய­லா­வும் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

சில தினங்­க­ளுக்கு முன்பு கொரோனா பாதிப்­புக்­கான சில அறி­கு­றி­கள் தென்­பட்­ட­தால் பரி­சோ­தனை செய்­து­கொண்­டா­ராம் கேப்­ரி­யலா. அதில் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

இத­னால் தம்­மைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொண்­டுள்ள அவர் சிகிச்­சையை அடுத்து மீண்டு வரு­வ­தா­கத் தக­வல். இந்­நி­லை­யில் நிகழ்ச்சி ஒன்­றுக்­காக கேப்­ரி­ய­லா­வு­டன் நட­ன­மா­டிய பாட­கர் ஆஜித்­துக்­கும் தொற்­றுப் பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் கொரோனா தொற்று பயம் கார­ண­மாக படப்­பி­டிப்­பில் பங்­கேற்க சமந்தா மறுத்­து­விட்­ட­தாக கூறப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து அவர் பங்­கேற்க இருந்த தெலுங்­குப் படத்­தின் படப்­பி­டிப்பு நிறுத்­தப்­பட்­டது.

இதே­போல் படக்­கு­ழு­வி­ன­ரின் பாது­காப்­பைக் கருதி 'தள­பதி 65' படப்­பி­டிப்பை இப்­போ­தைக்­குத் தொடங்க வேண்­டாம் என நடி­கர் விஜய்­யும் கூறி­விட்­டா­ராம்.

ஜார்­ஜி­யா­வில் முதற்­கட்­டப் படப்­பி­டிப்பை முடித்த 'தள­பதி 65' படக்­கு­ழு­வி­னர் அடுத்­த­கட்­ட­மாக சென்­னை­யில் படப்­பி­டிப்பை நடத்­தத் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். தமி­ழ­கத்­தில் திடீ­ரென ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­ட­தால் வெளி­மா­நி­லத்தில் படப்­பி­டிப்பை நடத்த முடி­வா­னது.

இந்­நி­லை­யில் இயக்­கு­நர்­கள் கே.வி. ஆனந்த், தாமிரா, நடி­கர்­கள் பாண்டு, ஜோக்­கர் துளசி, துணை நடி­கர்­கள் என அடுத்­த­டுத்து கொரோனா தொற்­றால் பலி­யா­கி­னர். இத­னால் படப்­பி­டிப்பை நடத்த வேண்­டாம் என விஜய் கேட்­டுக்­கொண்­ட­தா­கத் தக­வல்.