'டாக்டர்' பட வெளியீடு தாமதமாகிறது

'டாக்டர்' பட வெளியீடு தாமதமாகிறது

1 mins read
3d8bec8a-823c-476f-a6d7-e7035868902e
'டாக்டர்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. -

சிவ­கார்த்­தி­கே­யன் நடித்­துள்ள 'டாக்­டர்' படத்­தின் வெளி­யீடு பொரு­ளா­தா­ரச் சிக்­கல், கொரோனா உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

நெல்­சன் இயக்­கத்­தில் உரு­வாகி உள்ள இந்­தப் படத்­தில் பிரி­யங்கா மோகன் நாய­கி­யாக நடித்­துள்­ளார். யோகி பாபு முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார்.

இப்­ப­டம் ரம­லான் பண்­டி­கையை ஒட்டி வெளி­யா­கும் என சில மாதங்­க­ளுக்கு முன்பு அறி­விக்­கப்­பட்­டது. பின்­னர் கொரோனா விவ­கா­ரத்­தால் வெளி­யீடு தள்­ளி­வைக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில் 'டாக்­டர்' வெளி­யீடு குறித்து சிவா­வின் ரசி­கர்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்­த­னர். இதற்கு படத்­தின் தயாரிப்புத் ­த­ரப்பு விளக்­கம் அளித்­துள்­ளது.

கொரோனா விவ­கா­ரம், பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்­ள­தா­க­வும் பட வெளி­யீட்­டிற்­காக பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வ­தா­க­வும் தயா­ரிப்பு நிறு­வ­னம் கூறி­யுள்­ளது. கொரோனா சூழ்நிலையில் பட வெளியீடு குறித்து பேச விரும்பவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.