தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உளவு பார்க்கும் அருண்

3 mins read
475f5c65-a023-4be3-9b0d-2ee1c9777da6
-

தீவி­ர­வா­தம் என்­பது ஒரு மத­மும் ஒரு நாடும் மட்டும் சம்­பந்­தப்­பட்ட விஷ­ய­மல்ல என்­றும் 'பார்­டர்' படம் இந்­தக் கருத்தை வலி­யு­றுத்­தும் படைப்­பாக உரு­வாகி உள்­ளது என்­றும் சொல்­கி­றார் இயக்­கு­நர் அறி­வ­ழ­கன்.

'ஈரம்' படத்­தின் மூலம் தமிழ் சினிமா ரசி­கர்­களைத் தன் பக்­கம் திரும்­பிப் பார்க்க வைத்த அவர், இப்­போது அருண் விஜய்­யு­டன் கூட்­டணி அமைத்­துள்­ளார்.

'பார்­டர்' படத்­தில் ரெஜினா, ஸ்ஃ­டெபி பட்டேல் என இரண்டு நாய­கி­கள் உள்­ள­னர். உள­வுத்­துறை அதி­கா­ரி­யாக நடித்­துள்­ளார் அருண்­விஜய்.

தமிழ் சினிமா மொழி­யில் ஒரு புது­வி­த­மான தேர்ச்­சி­யை­யும் முன் நகர்­வை­யும் தம்­மால் பார்க்க முடி­வ­தா­கச் சொல்­கி­றார் அறி­வ­ழ­கன். இளை­யர்­கள் அதி­கம் எதிர்­பார்க்­கத் துவங்கிவிட்­ட­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், தமக்­கும் நல்ல அனு­ப­வங்­கள் கிடைத்­தி­ருப்­ப­தா­க­வும் மன­தில் புதிய சிந்­த­னை­கள் உரு­வாகி இருப்­ப­தா­க­வும் சொல்­கி­றார்.

இவை அனைத்­தை­யும் துணைக்கு வைத்­துக்­கொண்டு 'பார்­டர்' படத்­துக்­காக கள­மி­றங்கி இருப்­ப­தா­கச் சொல்­லும் அறி­வ­ழ­கன், இந்­தப் புதிய படம் தேச­பக்தி, தீவி­ர­வா­தம் என்று பய­ணப்­படும் என்­கி­றார்.

அடுக்­க­டுக்­காக வந்து விழும் முடிச்­சு­கள், அவை ஒவ்­வொன்­றாக அவி­ழும் விதம் மக்­கள் எதிர்­பார்க்­கும் வகை­யில் அமைந்­தி­ருக்­கும் என்று உத்­த­ர­வா­தம் அளிப்­ப­வர், இந்­தப் படத்­தில் தீவி­ர­வா­தத்­தைக் கடந்து தாம் கவ­ன­மாக எழு­திய உணர்­வு­களும் நல்ல உள­வி­ய­லும் இருக்­கும் என உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார்.

டெல்­லி­யும் அதன் சுற்­றுப்­பு­ற­மும்­தான் கதைக்­க­ள­மாம். ஓர் உள­வுத்­துறை அதி­கா­ரி­ பார்­வை­யின் வழி படம் நகர்ந்து செல்­லும் என்­கி­றார்.

"தன் வாதத்தை நிரூ­பிக்க துப்­பாக்­கி­யைக் கையில் எடுத்து அதில் பாதிக்­கப்­ப­டு­வது மக்­க­ளாக இருக்­கும்­போது எது­வாக இருந்­தா­லும் தவ­று­தான் என்று தோன்­று­கிறது. இது தீவி­ர­வா­தம் பற்­றிய படமா அல்­லது உள­வுத்­துறை பற்­றிய படமா என்­பதை ஒற்றை வரி­யில் சொல்­லி­விட முடி­யாது," என்­கி­றார் அறி­வ­ழ­கன்.

ஒரு கதை­யைப் பட­மாக எடுக்­கும் முன்பு, இதை ஏன் பட­மாக்க வேண்­டும்? அதி­லும் தாம் ஏன் இயக்க வேண்­டும்? என இரு கேள்­வி­க­ளைத் தமக்­குத் தாமே எழுப்­பிக்கொள்­வா­ராம். இதற்கு சாத­க­மான விடை கிடைத்த பிறகே கதையை மெரு­கேற்­று­வா­ராம்.

"அருண் விஜய்­யைப் பொறுத்­த­வரை உள­வுத்­துறை அதி­கா­ரி­யாக பாத்­தி­ரத்­து­டன் அப்­ப­டியே பொருந்தி இருக்­கி­றார். படத்­தில் காட்­டப் போகும் உணர்வை ஆழ­மாக உள்­வாங்கி நடித்­துள்­ளார். அவ­ரின் வேகம், உழைப்பு, நேரம் தவ­றாமை ஆகி­ய­வற்­றைப் பார்த்து வியந்து போனேன்.

"இந்­தப் படத்­தில் அவ­ரைத் தவிர வேறு யாரும் இந்­த­ளவு கச்­சி­த­மாக நடித்­தி­ருக்க முடி­யுமா என்று இப்­போது என் மன­தில் தோன்­று­வது உண்மை. கதை­யில் உள்ள தீவி­ரத்­தை­யும் தேவைப்­படும் உழைப்­பை­யும் அக்­க­றை­யை­யும் புரிந்­து­கொண்டு அவர் செயல்­பட்­ட­தால் படத்தை 45 நாள்­களில் முடிக்க இயன்­றது. பெருந்­தொற்று காலத்­தில் இப்­படி ஒரு படத்­தைத் திட்­ட­மிட்டு முடிப்­ப­தெல்­லாம் எளி­தான காரி­ய­மல்ல," என்று பாராட்­டு­கி­றார் அறி­வ­ழ­கன்.

கதைப்­படி ரெஜி­னா­வும் உள­வுத்­துறை அதி­கா­ரி­தா­னாம். ஸ்டெஃபி பட்­டே­லுக்­கும் உரிய முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்­டி­ருக்­கி­ற­தாம்.

"நிறைய அழ­கிப் போட்­டி­களில் பங்­கேற்று வெற்­றி­க­ளைப் பெற்­ற­வர் ஸ்டெஃபி. அவர் நடிக்­கும் முதல் தமிழ்ப் படம் இது. நிச்­ச­ய­மாக ரசி­கர்­க­ளைத் தன் பக்­கம் கவர்ந்­தி­ழுப்­பார்.

"பொது­வாக என் படத்­தில் பெண்­க­ளுக்கு முக்­கிய இடம் கொடுக்க விரும்­பு­வேன். நாம் எழு­தும் ஒவ்­வொரு வார்த்­தை­யும் மக்­க­ளைப் பாதிக்­கும். சரா­சரி மக்­கள் அதை வேதம் போன்று கரு­து­கி­றார்­கள். இதை­யெல்­லாம் கவ­னத்­தில் வைத்­துக்­கொண்டு படத்தை உரு­வாக்­கு­கி­றேன்.

"'விக்­ரம் வேதா' பார்த்த பிறகு இசை­ய­மைப்­பா­ளர் சாம் சி.எஸ். உடன் பணி­யாற்ற விரும்­பி­னேன். முகம் கோணா­மல் ஒத்­து­ழைப்பு கொடுத்த விஜய் ராகவேந்திராவுக்­கும் நன்றி சொல்ல வேண்­டும். பெரும் நம்­பிக்­கை­யு­டன் காத்­தி­ருக்­கி­றேன். 'பார்­டர்' படத்­தில் அதற்­கான அடை­யா­ளம் இருப்­ப­து­தான் மகிழ்ச்சி," என்­கி­றார் அறி­வ­ழ­கன். கதை டெல்­லி­யில் நடந்­தா­லும், சம்­ப­வங்­கள் அனைத்­துமே நம் மன­திற்கு நெருக்­க­மான விஷ­யங்­க­ளைப் போல் இருக்­கு­மாம்.