ஆண்ட்ரியா அறிவுரைகள்

ஆண்ட்ரியா அறிவுரைகள்

3 mins read
c41a2ca5-2896-4f4d-8adc-c46b09a867c5
ஆண்ட்ரியா -

கொரோனா கிரு­மித்தொற்று ஏற்­ப­டும்­போது அதி­கம் உணர்ச்சி வசப்­ப­டக்­கூ­டாது என்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

அது­போன்ற தரு­ணங்­களில் மன­நல ஆலோ­சனை பெறு­வது மிக அவ­சி­யம் என்று அண்­மைய சமூக வலைத்­த­ளப் பதிவு ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஆண்ட்ரியாவுக்­கும் கிரு­மித்தொற்­றுப் பாதிப்பு ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து தம்­மைத் தாமே தனி­மைப்­ப­டுத்­திக் கொண்ட அவர், சிகிச்­சைக்­குப் பின் நல­ம­டைந்­துள்­ளார்.

அவ­ரது தனி­மைப்­ப­டுத்­தல் பட­லம் முடிவுக்கு வந்­துள்­ளதை அடுத்து இந்­தப் பதிவை வெளி­யிட்­டி­ருப்­ப­தாக கூறி­யுள்­ளார்.

கொரோனா பாதிப்பு இருப்­ப­தாக அறி­கு­றி­கள் மூலம் உணர்ந்­தால் உடனடி­யாக அர­சாங்­கத்­தின் உத­வியை நாட ­வேண்­டும் என்று அந்­தப் பதி­வில் வலி­யு­றுத்தி உள்­ளார். மேலும், தமது அனு­ப­வத்­தைக் கொண்டு ரசி­கர்­களுக்­கும் பொது­மக்­க­ளுக்­கும் பத்து ஆலோ­ச­னை­களை வழங்கி உள்­ளார் ஆண்ட்ரியா.

கொரோனா கிரு­மித்­தொற்று என்­பது உல­க­ள­வி­லான ஒரு தொற்று நோய் என்­றும் இந்த நோய்த் தொற்று யாருக்கு வேண்­டு­மா­னா­லும் ஏற்­படும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

"நமக்கோ அல்லது அரு­கில் இருப்­ப­வர்­க­ளுக்கோ தொற்று ஏற்­ப­டும்­போது அது தொடர்­பான குற்ற விசா­ர­ணை­கள் தேவை­யில்லை. உங்­க­ளைச் சார்ந்­த­வர்­க­ளி­டம் கரு­ணை­யோடு இருங்­கள்.

"அறி­கு­றி­கள் தென்­பட்­ட­பின் கால­தா­ம­தம் கூடாது. அறி­கு­றி­கள் தீவி­ர­மா­னாலோ உயிர்­வா­யு­வின் அளவு குறைந்­தாலோ உட­ன­டி­யாக மருத்­துவ உத­வியை நாடு­வது அவ­சி­யம்.

"மருத்­துவ உத­வி கிடைக்­கும்­வரை உயிர் வாயு அள­வைக் கட்­டுப்­பாட்­டில் வைத்­துக்­கொள்­வது முக்­கி­யம். இதற்கு குப்­பு­றப்­ப­டுத்­துக் கொள்­வது போன்ற செயல்­பா­டு­கள் உத­வும்," என்­கி­றார் ஆண்ட்ரியா.

ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­க­ளு­டைய குடும்­பத்­தி­னர் மட்­டும் பாது­காப்­பாக இருந்­தால் போதும் என்று நினைப்­பது சரி­யல்ல என்று குறிப்­பிட்­டுள்ள அவர், வீட்­டுப் பணி­யா­ளர்­கள் பாது­கா­வ­லர்­கள் என்று தம்மைச் சுற்­றி­யுள்­ள­வர்­க­ளை­யும் பாது­காக்க வேண்டி­யது ஒவ்­வொ­ருவரின் கடமை என்று அறி­வு­றுத்தி உள்­ளார்.

"தனி­மை­யில் இருக்­கும்­போது அதி­கம் உணர்ச்சி வசப்­ப­டு­வோம். எனவே மன­நல ஆலோ­சனை நிச்சயம் தேவை. கொரோனா விவ­கா­ரம் தொடர்­பான எதிர்­மறை செய்­தி­கள், புள்­ளி­வி­வ­ரங்­கள் தின­மும் வெளி­வந்­த­ப­டி­தான் இருக்­கும். அவற்­றி­லி­ருந்து மொத்­த­மாக விலகி இருப்­பது நல்­லது.

"மன அ­ழுத்­தம் என்­பது ஒரு­வ­ரது நோய் எதிர்ப்புச் சக்­தி­யைக் குறைத்­து­வி­டும். புத்­த­கங்­கள் படிப்­பது, பாடல்­கள் கேட்­பது, நண்­பர்­கள், நல்­ல­வர்­க­ளு­டன் உரை­யா­டு­வது போன்ற நட­வ­டிக்­கை­கள் மன அழுத்தத்தை மறை­யச் செய்­யும்.

"உட­லில் எதிர்ப்பு சக்தி அதி­க­ரிக்­கும் மருந்­து­கள், உண­வு­க­ளைத் தவ­றா­மல் எடுத்­துக் கொள்­ளுங்­கள். சில மூலி­கை­களும் கைகொ­டுக்­கும். எனி­னும் இவை அனைத்­தும் துணை மருத்­து­வம்­தான். கொரோனா தொற்­றுக்கு உரிய மருத்­து­வ­ரைக் கலந்­தா­லோ­சித்து தேவை­யான மருந்­து­களை உட்­கொள்­வ­தும் மிக அவ­சி­யம்," என்­கி­றார் ஆண்ட்ரியா.

தம்மை தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்­ட­போது தன் வீட்டு பால்­க­னி­யி­லும் மொட்டை மாடி­யி­லும் தினமும் சிறிது நேரத்­தைச் செல­வி­டு­வா­ராம். சுத்­த­மான காற்றை சுவா­சிப்­பது மன ஆறு­த­லுக்கு உத­வும் என்­கி­றார்.

தொற்­றுக் காலத்­தில் உணவு விஷ­யத்­தில் கூடு­தல் கவ­னம் தேவை என்­ப­தும் இவ­ரது அறி­வு­ரை­களில் ஒன்று. மிளகு ரசம், இஞ்­சித் தேநீர், மஞ்­சள் கலந்த பால், சூப் வகை­களை அருந்­த­லாம் என்­கிறார். சளி பிடிக்­கக்­கூ­டிய உண­வு­களை மொத்­த­மாக தவிர்க்­கும் அதே­நே­ரத்­தில் அடிக்­கடி தண்­ணீர், பழ­ர­சங்­கள் என நீரா­கா­ரங்­களை உட்­கொள்­வது நல்­லது என கிட்­டத்­தட்ட தேர்ந்த மருத்­து­வ­ரைப் போலவே பேசு­கி­றார் ஆண்ட்ரியா.

தொற்று உறுதி செய்­யப்­பட்­டால் பயத்தை ஏற்­ப­டுத்­தும். எதிர்­மறை சிந்­த­னை­க­ளுக்கு இடம்­கொடுக்கக்கூடா­தாம். அத்­த­கைய சிந்­த­னைப் போக்கு நிலை­மையை மோச­மாக்­கி­வி­டும் என்­கி­றார்.

"நோயி­ல் இருந்து மீள்­வ­தில் மட்­டுமே கவ­னம் இருக்­க­வேண்­டும். இந்­தக் கிரு­மித்தொற்று மூக்கு, தொண்டை, இறு­தி­யாக நுரை­யீ­ரல் என சுவா­சப் பாதை­யைத்­தான் தாக்­கு­கிறது. எனவே, சுவா­சப் பாதையை தொற்­றி­லி­ருந்து காக்க என்­ன­வெல்­லாம் செய்­ய­வேண்­டுமோ அதை மருத்­து­வ­ரின் ஆலோச னைப்­படிச் செய்­யுங்­கள்," என்கிறார் ஆண்ட்ரியா.