உலகத் திரைப்பட விழாவில் 'சூரரைப் போற்று'

உலகத் திரைப்பட விழாவில் 'சூரரைப் போற்று'

1 mins read
02c620ae-370f-432f-a736-607652012c69
படம்: இணையம் -

சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படம் ஷாங்காய் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.

எதிர்வரும் ஜூன் 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது.

கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ள இவ்விழாவில் 'சூரரைப் போற்று' திரையிடப்படுவதாக படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

'சூரரைப் போற்று' படம் நேரடியாக இணையத்தில் வெளியீடு கண்டது. அதையடுத்து மேலும் பல தமிழ்ப் படங்கள் இணையத்தில் வெளியீடு கண்டுள்ளன.