ரஜினி, கமல் இருவரும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது.
தமிழகத் தேர்தல் நடந்து முடிந்திருப்பதால் இருவரும் திரையுலகப் பணிகளில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனராம்.
ரஜினி தற்போது 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்துள்ளார். அவர் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.
'சிறுத்தை' சிவாவை அடுத்து ரஜினி படத்தை இயக்கப்போவது யார் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தன் மருமகனும் நடிகருமான தனுஷுக்கு அந்த வாய்ப்பை வழங்க ரஜினி முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, ராஜ்கிரணை வைத்து 'பவர் பாண்டி' படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். அந்தப் படம் விமர்சன ரீதியில் பாராட்டப்பட்டது. ரஜினியும் படம் நன்றாக இருப்பதாக தனுஷை பாராட்டினாராம்.
இதனால் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய கையோடு தனுஷ்-ரஜினி கூட்டணியில் உருவாகும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகக்கூடும்.
இதற்கிடையே 'அண்ணாத்த' படத்தையடுத்து இயக்குநர் தேசிங்கு ராஜா இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகக்கூடும்.

