திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
ddaa1be1-425b-4c5d-8354-d139e203aae8
-
multi-img1 of 2

யுவன் சங்கர், அமீன் பாடிய பாடல்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் ஏ.ஆர். ரகுமானின் மகன் அமீனும் இணைந்து ஒரு பாடலைப் பாடி உள்ளனர்.ரமலான் பண்டிகையை ஒட்டி இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இது முகமது நபியை புகழ்ந்து எழுதப்பட்டுள்ள பாடல். மதினா நகருக்கு முகமது நபி வருகை புரிந்தபோது அங்குள்ள மக்களால் பாடப்பட்டது என்றும் பெரும் வரலாற்றை உள்ளடக்கிய மதினா நகரில் உருவான இந்தப் பாடல் மிகவும் புகழ்பெற்றது என்றும் மாலை மலர் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்தப் பாடலுக்கு இணையத்தில் பலத்த வரவேற்பு கிடைத்து வருவதாகத் தகவல்.

பதிலடி கொடுத்த ராய் லட்சுமி

அண்மையில் ஊரடங்குக்கு முன்பு வெளியே சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட சில கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுள்ளார் லட்சுமி.

அதில் நீச்சலுடையில் அவர் கவர்ச்சியாக காட்சியளிக்கும் படங்களும் அடங்கும். இதையடுத்து அவரது சமூக வலைத்தளப் பதிவுக்குப் பின்னூட்டமிட்டுள்ள ரசிகர்கள் சிலர், வாய்ப்புகள் இல்லாததால்தான் கவர்ச்சிப் படங்களை வெளியிடுகிறீர்களா என்று கேட்டு அவரைச் சீண்டியுள்ளனர்.

இதனால் கடும் எரிச்சலடைந்த ராய் லட்சுமி, இதுபோன்று குறுக்கு வழியில் வாய்ப்புத் தேடவேண்டிய நிலையில் தாம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அவரது கைவசம் அதிக படங்கள் இல்லை. அவர் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களில் சில கொரோனா விவகாரத்தால் கைவிடப்பட்டுள்ளன.