‘தமிழ்தான் எனது தகுதி’

"நான் சினிமா துறைக்கு வந்­தது ஒரு விபத்து என்று சொல்­லாத நடி­கை­களை விரல் விட்டு எண்­ணி­வி­ட­லாம். ஆனால் எனக்­கு ­வேறு வழி­யில்லை. ஏன் நடிப்­புத்­து­றைக்கு வந்­தீர்­கள் என்ற கேள்­விக்கு அந்­தப் பதில்­தான் பொருத்­த­மாக இருக்­கும்," என்று சொல்­லிச் சிரிக்­கி­றார் இளம் நாயகி அதுல்யா ரவி.

கோயம்­புத்­தூ­ரைச் சேர்ந்த இவ­ரது நடிப்­பில் அடுத்­த­டுத்து நான்கு படங்­கள் வெளி­யீடு காண உள்­ளன.

சினிமா மீது தமக்கு துளி­கூட ஆர்­வம் இருந்­த­தில்லை என்­றும் நடிப்­பது குறித்து தாம் யோசித்­ததே இல்லை என்­றும் கூறு­கி­றார். எல்­லோ­ரை­யும் போல் சினிமா ரசி­கை­யாக மட்­டுமே இருந்­த­தா­கச் சொல்­கி­றார்.

பொறி­யி­யல் படித்­துக் கொண்­டி­ருந்­த­போது கல்­லூரி மாண­வர்­கள் எடுத்த குறும்­ப­டம் ஒன்­றில் அதுல்­யாவை நாய­கி­யாக நடிக்­கக் கேட்­டுள்­ள­னர். வீட்­டில் அனு­ம­தித்­தால் நடிக்­கி­றேன் என்­றா­ராம்.

ஆனால் பெற்­றோரோ இதெல்­லாம் சரிப்­பட்டு வராது என்று சொல்லி, நடிக்க முட்­டுக்­கட்டை போட்­டுள்­ள­னர். ஆனால் மாண­வர்­கள் விட­வில்லை.

மொத்­த­மாக கிளம்­பி­வந்து அதுல்­யா­வின் பெற்­றோ­ரி­டம் கெஞ்­சாத குறை­யாக அனு­மதி கேட்டு எப்­ப­டியோ அவரை நடிக்க வைத்­துள்­ள­னர்.

"அதன்­பி­ற­கு­தான் பெரிய கூத்து நடந்­தே­றி­யது. குறும்­ப­டம் என்று நாங்­கள் நினைத்­தது எங்­க­ளை­யும் மீறி வளர்ந்­தது. சனி, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் படப்­பிடிப்பை நடத்­தி­னோம். நான்­காண்­டு­கள் பொறி­யி­யல் படித்­துக்­கொண்டே படப்­பிடிப்பை நடத்­தி­ய­தில் இரண்டு மணி நேரத்­துக்­கும் குறை­யாத முழு­நீ­ளத் திரைப்­ப­டமே தயாராகிவிட்­டது.

"அதை 'மது­பா­னக் கடை' பட இயக்­கு­நர் கம­லக்­கண்­ணன் பார்த்­தார். பிறகு படத்தை வெளி­யி­ட­வும் உதவி செய்­தார். அது­தான் தமி­ழில் நான் அறி­மு­க­மான 'காதல் கண் கட்­டுதே' படம்.

"முழுக்க கோவை­யில் கல்­லூரி மாண­வர்­க­ளால் உரு­வான படம். இப்­போது சொல்­லுங்­கள் நான் நடிக்க வந்­தது விபத்­து­தானே" என்று அதுல்­யா­வி­ட­மி­ருந்து கேள்வி எழு­கிறது.

இதை­ய­டுத்து வி.இசட். துரை­யின் 'ஏமாளி', அன்­ப­ழ­க­னின் 'அடுத்த சாட்டை', சமுத்­தி­ர­க­னி­யின் 'நாடோ­டி­கள்-2' என்று அடுத்­த­டுத்து முக்­கிய இயக்­கு­நர்­க­ளின் இயக்­கத்­தில் ஆறு படங்­களில் நடித்­துள்­ளார். இப்­போது 'வட்­டம்', 'முருங்­கக்­காய் சிப்ஸ்' என நான்கு படங்­கள் இவ­ரது நடிப்­பில் வெளி­யீடு காண உள்ளன.

இவ­ரது பாட்­ட­னார் கோவை­யில் பெயர் பெற்ற மாட்­டு­வி­யா­பா­ரி­யாம். தோட்­டம், விவ­சா­யம் என பசு­மை­யான சூழ்­நி­லை­யில் வளர்ந்­துள்­ளார். தென்னை, மா, பலா, வாழை, கரும்பு என தமது தோட்­டத்­தில் எங்கு திரும்­பி­னா­லும் பசுமை குளிர்­விக்­கும் என்று உற்­சா­கத்­து­டன் சொல்­ப­வர், தாம் நடிக்க வந்­த­போது இருந்­த­தை­விட தமிழ் சினிமா சூழ்­நிலை இப்­போது முன்­னேற்­றம் கண்­டுள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

"பிற மொழி நாய­கி­க­ளுக்கு தமி­ழில் நல்ல வர­வேற்பு கிடைக்­கிறது. ஆனால், தமிழ்ப் பெண்­க­ளால்­தான் தாய்­மொ­ழி­யான தமி­ழில் சர­ள­மா­க­வும் உணர்ச்­சி­க­ர­மா­க­வும் பேச­மு­டி­யும். இதைப் பெரிய தகு­தி­யா­கக் கரு­து­கி­றேன்.

"இந்த ஒரு கார­ணத்­துக்­காக மட்­டு­மா­வது தமிழ்ப் பெண்­க­ளுக்கு அதிக வாய்ப்­பு­கள் அளிக்­கப்­பட வேண்­டும். கதை நடை­பெ­றும் ஊரின் சாய­லுக்கு அதிக முக்­கி­யத்­து­வம் தரும் இயக்­கு­நர்­கள் இப்­போது அதி­க­ரித்­துள்­ள­னர் என்­பது நல்ல விஷ­யம்.

"'அடுத்த சாட்டை' படத்­தில் இடை­வே­ளைக்கு முன்பு வரும் காட்­சி­யில் சமுத்­தி­ர­கனி சார் மூன்று நிமி­டங்­கள் போல் வச­னம் பேசு­வ­தாக இருந்­தது. ஆனால், தாம் மட்­டுமே பேசிக்கொண்­டி­ருந்­தால் நன்­றாக இருக்­காது, கதா­நா­ய­கிக்­கும் முக்­கி­யத்­து­வம் கொடுங்­கள் என்று அவர் இயக்­கு­ந­ரி­டம் கூறி­னார்.

"இதை­ய­டுத்து படப்­பி­டிப்­பின்­போது எந்­த­வித முன்­னேற்­பா­டும் இல்­லா­மல் பெரிய வச­னத்­தைப் பேசி நடிக்­கு­மாறு இயக்­கு­நர் கூறி­னார். நான் சளைக்­க­வில்லை. அந்­தக் காட்­சி­யில் ஒரே டேக்­கில் வச­னத்­தைப் பேசி­மு­டித்­தேன். அந்­தக் காட்­சிக்­குத் திரை­ய­ரங்­கு­களில் பலத்த கைத்­தட்­டல் கிடைத்­தது.

"தமிழ்ப் பெண்­ணாக இருந்­த­தால்­தான் இது சாத்­தி­ய­மா­னது. இதற்­காக சமுத்­தி­ர­கனி சாருக்­கும் இயக்­கு­நர் அன்­ப­ழ­க­னுக்­கும் நன்றி சொல்ல கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்," என்­கி­றார் அதுல்யா ரவி.

தற்­போது அம­லா­பால் தயா­ரிக்­கும் படத்­தில் நடித்து வரு­கி­றா­ராம். மிக விறு­வி­றுப்­பான கதை­யம்­சம் கொண்ட அந்­தப் படம் ரசி­கர்­க­ளுக்­குப் பல உண்­மை­களை எடுத்­துச் சொல்­லும் என்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!