இணையத்தில் வெளியாகும் ஜெய் படம்

இணையத்தில் வெளியாகும் ஜெய் படம்

1 mins read
0f603e50-7ed4-413a-9c47-6dafdc376d2d
-

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'குற்றமே குற்றம்' படம் நேரடியாக இணையத்தில் வெளியாகி றது. இதில் ஜெய் நாயகனா கவும் திவ்யா நாயகியாகவும் நடித்துள்ளனர். ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பே இந்தப் படம் வெளியீடு காணத் தயாராகிவிட்டது. எனினும் திரையரங்க வெளியீட்டிற்காக தயாரிப்புத் தரப்பு காத்திருந்த தாம். இந்நிலையில் முன்னணி நிறுவனம் ஒன்று நேரடி இணைய வெளியீட் டிற்கு கணிசமான விலையை நிர்ணயித்ததால் வெளியீட்டு உரிமை கைமாறியுள்ளது. மிக விரைவில் இந்தப் படம் இணையத்தில் வெளியீடு காண்பது குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும்.