'சூர்யா-40' சுவாரசியங்கள்

'சூர்யா-40' சுவாரசியங்கள்

3 mins read
260047e3-476d-4677-be2d-ffacdd90da5e
-

பாண்­டி­ராஜ் இயக்­கத்­தில் விறு­வி­றுப்­பாக வளர்ந்து வரு­கிறது சூர்­யா­வின் 40வது படம்.

வழக்­க­மாக கிரா­மத்­துக் கதைக்­ க­ளத்­தில்­தான் படம் எடுக்க விரும்­பு­வார் பாண்டி­ராஜ். சூர்­யா­வும் அது­போன்ற ஒரு கதை­யைத்­தான் எதிர்­பார்த்­தா­ராம்.

ஆனால், கிரா­ம­மும் நக­ர­மும் இணைந்த மிரட்­ட­லான கதையை பாண்­டி­ராஜ் விவ­ரித்­த­போது அசந்­து­போ­னா­ராம் சூர்யா.

'கடைக்­குட்டி சிங்­கம்' படத்­தைத் தயா­ரித்­த­போதே அதன் இயக்­கு­நர் பாண்­டி­ராஜுக்கு முன்­ப­ண­மாக ஒரு தொகை­யைக் கொடுத்து தனக்கு ஒரு கதையை உரு­வாக்க சொல்­லி­யுள்­ளார் சூர்யா. அதற்­கான பணி­களில் பாண்­டி­ராஜ் ஈடு­பட்­டி­ருந்­த­போ­து­தான் முன்­னணி நிறு­வ­ன­மான சன் பிக்­சர்ஸ் சூர்­யாவை அணு­கி­யி­ருக்­கிறது.

உடனே பாண்­டி­ராஜ் பெயரை சூர்யா பரிந்­து­ரைக்க, மூவர் கூட்­ட­ணி­யில் 'சூர்யா 40' உரு­வாகி வரு­கிறது. முழுக்க கிரா­மத்­துப் பின்­னணி கொண்ட படம் என்ற தமது பாதை­யி­லி­ருந்து இந்­தப் படத்­துக்­காக விலகி வந்­தி­ருக்­கி­றார் பாண்­டி­ராஜ்.

பொள்­ளாச்சி பகு­தி­களில் நிகழ்ந்த பாலி­யல் வன்­கொடுமை­க­ளுக்­குப் பழி­வாங்­கும் இளை­ஞ­னின் கதை என்று தொடக்­கத்­தில் ஒரு பேச்சு அடி­பட்­டது. ஆனால், அந்­தச் சம்­ப­வத்­துக்­கும் இந்­தப் படத்­துக்­கும் துளி­கூட தொடர்பில்லை.

அதே­ச­ம­யம் பெண்­களுக்கு எதி­ரான அநீ­தி­க­ளுக்கு சாட்­டை­யடி கொடுக்­கும் காட்­சி­கள் இருப்­ப­தாக 'சூர்யா 40' படக்­குழு திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­விக்­கிறது.

இந்­தப் படத்­துக்கு முத­லில் வேல்­ராஜ்­தான் ஒளிப்­ப­திவு செய்­வ­தாக இருந்­தார். ஆனால், அவர் வெற்­றி­மா­ற­னின் 'வாடி­வா­சல்' படத்­துக்கு ஒப்­பந்­த­மாகி உள்­ளார். இது­வும் சூர்யா நாய­க­னாக நடிக்­கும் படம்­தான். அதற்­கான முன்­னேற்­பா­டு­க­ளைச் செய்ய வேண்­டு­மென்­ப­தால் வேல்­ராஜ் 'சூர்யா 40'ல் ஒப்­பந்­த­மா­க­வில்லை.

அவ­ருக்­குப் பதி­லாக ரத்­ன­வேலு இணைந்­துள்­ளார். பாண்­டி­ராஜ்-ரத்­ன­வேலு கூட்­ட­ணி­யில் பட­மாக்­கப்­படும் ஒவ்­வொரு காட்­சி­யும் அசத்­தல் ரகம் என்று படக்­கு­ழு­வி­னர் இப்­போதே மெச்­சிக் கொள்­கி­றார்­கள்.

சூர்­யா­வுக்கு இதில் இரட்டை வேடம் என்­பது தவ­றான தக­வ­லாம். பர­ப­ரப்­புக்­காக யாரோ கிளப்­பி­விட்ட வதந்தி இது என்­றும் படத்­தில் ஒரே ஒரு சூர்­யா­தான் என்­றும் இயக்­கு­நர் தரப்பு கூறு­கிறது. தங்­கைக்­கா­கப் போரா­டும் அண்­ணன், காத­லிக்­காக உரு­கும் காத­லன் என ஒரு சூர்­யா­தான் இரண்­டு­வி­த­மாக வலம் வரு­வா­ராம்.

படத்­தின் நாயகி பிரி­யங்கா மோகன் தற்­போது சிவ­கார்த்­தி­கே­ய­னு­டன் 'டாக்­டர்' படத்­தில் நடித்து முடித்­துள்­ளார். அடுத்து சிவா நடிப்­பில் உரு­வா­கும் 'டான்' படத்­தி­லும் இவர்­தான் நாயகி. சிவா­வு­டன் அடுத்­த­டுத்து இரண்டு படங்­களில் ஒப்­பந்­த­மா­னது கோடம்­பாக்­கத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலை­யில், 'சூர்யா 40' படத்­தி­லும் இவரை ஒப்­பந்­தம் செய்­துள்­ளது சன் பிக்­சர்ஸ்.

வேட்டி சட்­டை­யில் கையில் வாளு­டன் சூர்யா நடந்து செல்­வது போன்று முதல் தோற்­றச் சுவ­ரொட்­டியை படக்­குழு வெளி­யிட சூர்யா ரசி­கர்­கள் உற்­சா­கத்­தில் மிதக்­கின்­ற­னர். சூர்யா நடிப்­பில் வித்­தி­யா­ச­மான அடி­த­டி பட­மாக இது உரு­வா­கும் எனும் நம்­பிக்கை இருப்­ப­தாக ரசி­கர்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

படத்­தின் தலைப்பை பாண்­டி­ராஜ் எப்­போதோ முடிவு செய்­து­விட்­டா­ராம். ஆனால், அண்­மை­யில் வெளி­யான ஒரு திரைப்­ப­டத்­தின் வில்­லன் கதா­பாத்­தி­ரத்­துக்கு அந்­தப் பெயர் வைக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் தலைப்பை மாற்­று­வது குறித்து பாண்­டி­ராஜ் தரப்பு யோசித்து வரு­கிறது.

படப்­பி­டிப்­பின்­போது பல சுவா­ர­சி­ய­மான சம்­ப­வங்­கள் நிகழ்ந்­துள்­ளன. முதற்­கட்­டப் படப்­பி­டிப்பு நடத்­தப்­பட்ட ஒரு கிரா­மத்­தில் திரு­ம­ண­மாகி வெளி­யூர் சென்­று­விட்ட ஊர்ப் பெண்­க­ளைச் சொந்த ஊருக்கு அழைத்து வந்து கொண்­டா­டு­வது போன்று ஒரு பாடல் காட்­சி­யைப் பட­மாக்கி உள்­ள­னர்.

இதற்­காக ஒரு திரு­வி­ழாக் கொண்­டாட்­டத்­திற்கே ஏற்­பாடு செய்­தி­ருக்­கி­றார் பாண்டி­ராஜ். இந்த ஏற்­பா­டு­க­ளைப் பார்த்து வியப்­படைந்த சூர்யா, 'இது­போன்ற சம்­பி­ர­தா­யம் இருப்­பதை நான் கேள்­விப்­பட்­டதே இல்லை. இது அரு­மை­யான ஏற்­பாடு' என்று பாராட்டி உள்­ளார்.

, :   

சூர்யா