தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா; 'ஊசி எங்கே?' என கேள்வி எழுப்பும் பலர்

தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா; 'ஊசி எங்கே?' என கேள்வி எழுப்பும் பலர்

1 mins read
6b48cbb8-36d3-40dd-9e38-8ef242c224fc
இணையத்தளத்தில் வெளியான படம். -

நடிகை நயன்தாரா அண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக ஒரு தகவலும் அது தொடர்பான புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே அவர் இத்தகவலை வெளியிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் திடீர் சர்ச்சையும் வெடித்துள்ளது.

நயன்தாராவுக்குத் தடுப்பூசி போடும் தாதியின் கையில் ஊசியே இல்லை என்றும் ஊசி போடுவது போல் வெறும் விரல்களைக் கொண்டு அவர் பாவனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா ஊசி போட்டுக்கொள்ளும் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிரும் பலர், 'ஊசி எங்கே?' என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த சர்ச்சை குறித்து நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கம் ஏதும் வரவில்லை. மேலும், இந்தப் படம் அவர் வெளியிட்டாரா என்பதும் உறுதியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்