இயல்பு நிலைக்குத் திரும்பிய நாயகியின் முகம்

இயல்பு நிலைக்குத் திரும்பிய நாயகியின் முகம்

1 mins read
3f5694a9-827c-43c8-8881-17d48e157c17
படம்: டுவிட்டர்/ரைஸா வில்சன் -

அண்மையில் தனது முகத்துக்குப் பொலிவூட்ட அழகுக்கலை நிபுணரை அணுகியிருந்தார் நடிகை ரைஸா வில்சன்.

எனினும் நிபுணத்துவ சிகிச்சைக்குப் பிறகு தனது முகம் வீங்கிப்போய் விகாரமாகி விட்டதாக அவர் பின்னர் புகார் எழுப்பினார். இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே சட்டரீதியான மோதல்கள் வெடித்தன.

இந்நிலையில் ரைஸாவின் முகம் இயல்புநிலைக்குத் திரும்பி உள்ளது. இந்த மகிழ்ச்சியில் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

அதைக் கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சில பதிவுகளுக்கு ரைஸாவும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பில் பங்கேற்கவும் அவர் தயாராகி வருகிறாராம்.

குறிப்புச் சொற்கள்