ரூ.1 லட்சம் நிதியளித்த நாயகிகள்
நடிகர்களைத் தொடர்ந்து தமிழ் சினிமா நடிகைகளும் தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு நிதி வழங்கத் தொடங்கி உள்ளனர்.
நடிகை நிதி அகர்வால் தன் பங்குக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படி மேலே சென்றுவிட்டார்.
தமிழக அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கிய கையோடு ஊரடங்கால் வேலையின்றித் தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக 'ஃபெப்சி' அமைப்புக்கும் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களைப் பின்பற்றி முன்னணி நாயகிகளும் மற்ற கலைஞர்களும் தங்களால் இயன்ற நிதியை வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
இயல்பு நிலைக்குத் திரும்பிய முகம்
அண்மையில் தனது முகத்துக்குப் பொலிவூட்ட அழகுக்கலை நிபுணரை அணுகியிருந்தார் ரைஸா.
எனினும் நிபுணத்துவ சிகிச்சைக்குப் பிறகு தனது முகம் வீங்கிப்போய் விகாரமாகி விட்டதாக அவர் பின்னர் புகார் எழுப்பினார். இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே சட்டரீதியான மோதல்கள் வெடித்த.
இந்நிலையில் ரைஸாவின் முகம் இயல்புநிலைக்குத் திரும்பி உள்ளது. இந்த மகிழ்ச்சியில் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
அதைக் கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சில பதிவுகளுக்கு ரைஸாவும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பில் பங்கேற்கவும் தயாராகி வருகிறாராம்.

