தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா: புது சர்ச்சை

தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா: புது சர்ச்சை

1 mins read
2b1f41ee-34fe-4554-a615-2bbdfb8237ea
இணையத்தில் வெளியான நயன்தாரா படம். -

நடிகை நயன்­தாரா அண்­மை­யில் கொரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாக ஒரு தக­வ­லும் அது தொடர்­பான புகைப்­ப­ட­மும் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­னது.

மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தவே அவர் இத்­த­க­வலை வெளி­யிட்­ட­தாக கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில் திடீர் சர்ச்­சை­யும் வெடித்­துள்­ளது.

நயன்­தா­ரா­வுக்குத் தடுப்­பூசி போடும் தாதி­யின் கையில் ஊசியே இல்லை என்­றும் ஊசி போடு­வது போல் வெறும் விரல்­க­ளைக் கொண்டு அவர் பாவனை செய்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

நயன்­தாரா ஊசி போட்­டுக்­கொள்­ளும் படத்தை சமூக வலைத்­த­ளங்­களில் பகி­ரும் பலர், 'ஊசி எங்கே' என்று கேள்வி எழுப்பி வரு­கி­றார்­கள்.

இந்த சர்ச்சை குறித்து நயன்­தாரா தரப்­பில் இருந்து விளக்­கம் ஏதும் வர­வில்லை. மேலும், இந்­தப் படம் அவர் வெளி­யிட்­டாரா என்­ப­தும் உறு­தி­யா­க­வில்லை.