நிவேதிதா: நான் ஒரு சாப்பாட்டுப் பிரியை

நிவேதிதா: நான் ஒரு சாப்பாட்டுப் பிரியை

2 mins read

முறை­யான உண­வுப் பழக்­க­மும் உடற்­ப­யிற்­சி­யும் இருந்­தாலே போதும் நல­மாக இருக்­க­லாம் என்­கி­றார் இளம் நடிகை நிவே­திதா சதீஷ்.

'சில்­லுக்­க­ருப்­பட்டி' படத்­தில் நடித்­துள்ள இவர், மனித வாழ்க்­கைக்கு நெருக்­கடி ஏற்­ப­டும்­போது மட்­டும் நல்ல பழக்­க­வ­ழக்­கங்­களைக் கடைப்­பி­டிப்பது மட்­டும் போது­மா­ன­தல்ல என்­கி­றார்.

"நடிப்­பும் நட­ன­மும் எனக்கு மிக­வும் பிடித்­த­மான விஷ­யங்­கள். அவற்றை அடுத்து என்ன பிடிக்­கும் என்று கேட்­டால் சாப்­பி­டு­வ­து­தான் என்­பேன். நான் ஒரு சாப்­பாட்­டுப் பிரியை," என்று சொல்­லிச் சிரிக்­கி­றார் நிவே­திதா.

எதை, எவ்­வ­ளவு சாப்­பிட்­டால் நல்­லது என்­ப­தெல்­லாம் தமக்கு அத்­துப்­படி என்று சொல்­லும் நிவே­திதா, தாம் பின்­பற்­றும் உண­வு­மு­றைக்­குத் தனது தாயார்­தான் கார­ணம் என்­கி­றார். நிவே­தி­தா­வின் தாய் ஊட்­டச்­சத்து நிபு­ண­ராம். அத­னால் சிறு­வ­யது முதலே முறை­யான உண­வுப்­ப­ழக்­கம் குறித்து, மக­ளுக்கு நிறைய விவ­ரங்­க­ளைச் சொல்­லிக் கொடுத்­தி­ருக்­கி­றார்.

"எவை­யெல்­லாம் சத்­தான உண­வு­கள் என்று எனக்கு யாரும் கற்­றுக் கொடுக்­கத் தேவை­யில்லை. எவை­யெல்­லாம் உடல்­ந­லத்­துக்­குப் பிரச்­சினை ஏற்­ப­டுத்­துமோ அவற்­றை­யெல்­லாம் நான் இயல்­பா­கவே தவிர்த்­து­வி­டு­வேன். காஃபி, தேநீர் இரண்­டுமே எனக்­குப் பிடிக்­காது. குளிர்­பா­னங்­கள் எதை­யும் அருந்­து­வ­தில்லை.

"சிறு­வ­யது முதலே நான் இப்­ப­டித்­தான். அத­னால் இந்த நெருக்­க­டி­யான கால­கட்­டத்­தில் நோய் எதிர்ப்பு சக்தி வள­ரும் வகை­யில் சாப்­பிட வேண்­டும் எனும் கட்­டா­யம் எனக்கு ஏற்­ப­ட­வில்லை. கார­ணம் நான் ஏற்­கெ­னவே நல்ல நோய் எதிர்ப்பு சக்­தி­யு­டன்­தான் இருக்­கி­றேன்," என்­கி­றார் நிவே­திதா.

ஒரு­வேளை தம்மை கொரோனா கிருமி தொற்­றி­யி­ருந்­தா­லும் அதற்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டாது என்­றும் அந்­தக் கிருமி தம் உட­லில் செய­லற்­றுப் போயி­ருக்­கும் என்­றும் சொல்­கி­றார்.

நிவே­தி­தா­வுக்கு தமி­ழில் இன்­னும் பெரிய படங்­கள் அமை­ய­வில்லை. தற்­காப்­புக் கலை­களை முறை­யாக கற்­றுத் தேர்ந்­துள்­ளார். கராத்­தே­வில் தேசிய அள­வி­லான போட்­டி­களில் வெற்றி பெற்­றுள்­ளா­ராம். நட­னத்­தின்­மீது மிகுந்த ஆர்­வம் கொண்­டி­ருப்­ப­வர். கதக் நட­னத்தை முறைப்­படி கற்­றுள்­ளார். உடற்­ப­யிற்­சிக் கூடத்­துக்­குத் தின­மும் செல்­வது, பல மணி­நே­ரம் உடற்­ப­யிற்சி செய்­வது எல்­லாம் தமக்கு ஒத்­து­வ­ராது என்­ப­வர், தின­மும் யோகா­ச­னம் செய்ய தவ­று­வ­தில்லை.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

"இதன்­மூ­லம் என்­னால் சுறு­சு­றுப்­பா­க­வும் வய­துக்கு மீறிய உற்­சா­கத்­து­ட­னும் செயல்­பட முடி­கிறது. உடற்­ப­யிற்சி செய்ய நேரம் கிடைக்­கா­விட்­டா­லும் பர­வா­யில்லை. தின­மும் 30 நிமி­டங்­கள் வேக­மாக நடைப்­ப­யிற்சி மேற்­கொண்­டால் போதும். இது இதயத்தை­யும் நுரை­யீ­ரல்­க­ளை­யும் நன்கு இயங்க வைக்­கும் என்­கி­றார்," நிவே­திதா.

தற்­போது நாம் உட்­கொள்­ளும் உண­வா­னது கடந்த காலத்­தைப் போன்று தர­மா­ன­தாக, நமக்கு முழு­மை­யாக நலம் தரக்­கூ­டி­ய­தாக இல்லை என்று இவ­ரது தாயார் அடிக்­கடி கூறு­வா­ராம்.

"நான் தெலுங்­குப் பெண் என்­றா­லும் சென்­னை­யில் பிறந்து வளர்ந்­த­வள். ரச­மும் இட்­லி­யும் இல்­லா­மல் என்­னால் வாழவே முடி­யாது. ஒரு­சில உண­வுக்கு நமது உடல் பழக்­கப்­பட்­டி­ருக்­கும். திடீ­ரென அதில் மாற்­றம் செய்­தால் உட­லின் உள்­கட்­ட­மைப்­பில் குழப்­பம் ஏற்­படும். மருத்­து­வர் சொல்­லா­மல் மாற்­றங்­க­ளைச் செய்ய வேண்­டாம்," என்­கி­றார் நிவே­திதா.