ராஷ்மிகா: தமிழ்நாட்டின் மருமகளாகும் ஆசையுள்ளது

ராஷ்மிகா: தமிழ்நாட்டின் மருமகளாகும் ஆசையுள்ளது

1 mins read
8f007649-e91a-4ace-bc82-bf4b42cc62c9
'சுல்தான்' காட்சியில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா. /:    -

ஒரு தமிழரையே தான் மணந்து கொள்ள ஆசைப்படுவதாகவும் தமிழ்நாட்டின் மருமகளாக விரும்பு வதாகவும் 25 வயதான ராஷ்மிகா மந்தனா ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியின்போது வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதைக்கேட்டு தமிழக ரசிகர்கள் பெரும் பூரிப்படைந்து உள்ளனர்.

நாட்டில் உள்ள ரசிகர்கள் பல ருக்கும் பிடித்த நடிகையாக, கனவுக்கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, குறுகிய காலத் தில் பலரது அன்புக்கும் பாத்திரமாகி உள்ளார்.

கன்னடத் திரைப்படமான 'கிரிக் பார்ட்டி' மூலம் 2016ஆம் ஆண்டில் அறிமுகமான இவர், தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

ராஷ்மிகா, அண்மையில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தின் படப்பிடிப்பின்போது, தமிழ்நாட்டின் கலாசாரத்தால் தான் ஈர்க்கப்பட் டுள்ளதாகக் கூறியிருந்தார்.

"நான் உண்மையில் தமிழ் கலா சாரத்தை நேசிக்கிறேன். அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் சுவை உணவை மிகவும் விரும்புகிறேன்," என்றார் ராஷ்மிகா.

இதனிடையே, மற்றொரு நடிகையான கீர்த்தி சுரேஷ், "நான் தொழிலதிபரைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அண்மையில் வெளியான செய்தியைப் பார்த்து எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.

"ஏெனனில், என் திருமணம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது.

"இப்போதைக்கு எனது முழு கவனமும் சினிமாவில்தான் உள்ளது. நான் ஏதேனும் பெரிதாக சாதிக்க வேண்டும் என ஆசைப்படு கிறேன்," என்று கூறியுள்ளார்.