பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேரும் திரிஷா

பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேரும் திரிஷா

1 mins read
cdd5c608-43ae-453d-9c1e-cb62f54e83bc
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் திரிஷா. -

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் மூத்த நடிகர் பால கிருஷ்ணாவின் ஜோடியாக நடிக்க நடிகை திரிஷா ஒப்பந்தமாகி உள்ளார். இதனால், மீண்டும் தனது இரண்டாவது அத்தி யாயத்தை தெலுங்குத் திரையுலகில் திரிஷா தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த திரிஷா தற்போது கதாநாயகிக்கு முக்கி யத்துவம் கொடுக்கும் திரைப் படங்களில் மட்டுமே பெரும்பாலும் நடித்து வருகிறார்.

கடைசியாக 'பேட்ட' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு இவரின் படங்கள் எதுவும் வெளிவராமல் இருந்தன.

பின்னர், கடந்த மாதம் திரிஷா நடிப்பில் உருவான த்ரில்லர் பட மான 'பரமபத விளையாட்டு' ஓடிடி யில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது 'பொன்னியின் செல்வன்', 'கர்ஜனை' 'சதுரங்க வேட்டை 2', 'ராங்கி', 'சர்க்கரை' உள்ளிட்ட சில படங்களையும் அவர் கைவசம் வைத்துள்ளார்.